மேட்டுப்பாளையம் அருகே நெகிழ்ச்சி கரடியிடம் இருந்து எஜமானை போராடி காப்பாற்றிய நாய்
2021-10-28@ 00:30:25

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனையை சேர்ந்தவர் ராமராஜ் (23). விவசாயி. இவரது மனைவி சித்ரா (20). இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ராமராஜ் சிறுமுகை அடுத்த குஞ்சப்பனை செட்டில்மென்ட் உள்ள தோட்டத்தில் வேலை செய்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் ஒரு கரடி தோட்டத்துக்குள் புகுந்தது. இதைப்பார்த்த ராமராஜ் அதிர்ச்சியடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் கரடி அவரது தலையில் தாக்க முயன்றது. அப்போது கைகளால் கரடியை தடுத்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பயத்தில் ராமராஜ் அலறியடித்து ஓடியபோது, அவரை கரடி விரட்டியது.
சத்தம் கேட்டு நாய் பப்பி ஓடிவந்து பார்த்தது. தனது எஜமான் கரடியுடன் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தது. பின்னர் குரைத்துக்கொண்ட அவருக்கு அரண்போல் நின்று கரடியை எதிர்த்து போராடியது. கரடியை ஆக்ரோஷமாக குரைத்து மிரட்டியது. இதனையடுத்து கரடி குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து அப்பகுதியினர் ராமராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் ராமராஜனிடம் விசாரித்தபோது, ‘‘எனது செல்ல நாய் பப்பிதான் கரடியிடம் இருந்து போராடி என்னை காப்பாற்றியது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Tags:
Mettupalayam elastic bear dog who fought and saved the master மேட்டுப்பாளையம் நெகிழ்ச்சி கரடி எஜமானை போராடி காப்பாற்றிய நாய்மேலும் செய்திகள்
கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை
ஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!