இலங்கை கடற்படை சிறைபிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை
2021-10-28@ 00:30:07

அறந்தாங்கி: இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் விரைவில் கோட்டைப்பட்டினம் திரும்ப உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3பேரும் கடந்த 19ம்தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு மோதி, மீனவர்களின் விசைப்படகை கடலில் மூழ்கடித்தனர்.
இதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இருவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் இருவரும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Sri Lanka Navy Kottaipattinam Fishermen Liberation இலங்கை கடற்படை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலைமேலும் செய்திகள்
ஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபாடும் இந்துக்கள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!