பெயர், சின்னத்துக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பம் புதிய கட்சி தொடங்குகிறேன்: அமரீந்தர் சிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2021-10-28@ 00:28:50

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்குவதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கட்சியின் பெயர், சின்னத்துக்கு ஒப்புதல் கோரி, தேர்தல் ஆணையத்திடம் அவர் விண்ணப்பித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், உட்கட்சி பூசலால் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், சண்டிகரில் நேற்று அவர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘நான் புதிய கட்சியை தொடங்குகிறேன். ஆனால், கட்சியின் பெயரை இப்போது கூற மாட்டேன். எனது கட்சியின் பெயர், சின்னத்துக்கு அங்கீகாரம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருக்கிறேன். அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் விவரங்களை வெளியிடுவேன். பஞ்சாப்பில் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் அல்லது தொகுதி பங்கீடு செய்து போட்டியிடுவோம். அது பற்றி நேரம் வரும் போது அறிவிக்கப்படும்,’’ என்றார். பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசுக்கு எதிராக அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சித்துவுக்கு மூளை இல்லை
அமரீந்தர் தனது பேட்டியில் மேலும் கூறுகையில், ‘‘நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒன்றும் தெரியாது. அவர் மூளை இல்லாதவர். பஞ்சாப்பின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக, காங்கிரசில் உள்ள எதிர்ப்பாளர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். ராணுவத்தில் நான் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். பஞ்சாப் உள்துறை அமைச்சராக 9.5 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பஞ்சாப் உள்துறை அமைச்சராக ஒரு மாதம் இருந்தவர்களை விட, பாதுகாப்பின் அடிப்படை அம்சங்கள் என்ன என்பது எனக்கு அதிகமாக தெரியும்,’’ என்றார்.
* அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு
‘ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 20 முதல் 30 பேர் கொண்ட குழுவுடன் சென்று நாளை (இன்று) சந்திக்கிறேன். அப்போது, ஒன்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டாக நடத்தி வரும் போராட்டம் பற்றியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் கட்சிகளை தோற்கடிப்பது குறித்தும் அமித்ஷாவிடம் பேசுவேன்,’ என்றும் அமரீந்தர் சிங் கூறினார்.
Tags:
Name Symbol Approval Application New Party Amarinder Singh பெயர் சின்னம் ஒப்புதல் கோரி விண்ணப்பம் புதிய கட்சி அமரீந்தர் சிங்மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!
சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது!!
பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!