SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு‌ல்லைப் பெரியாறு அணை பலமாக தான் உள்ளது!: பீதியை கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்..கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை..!!

2021-10-26@ 11:06:12

திருவனந்தபுரம்: மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக - கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.  இந்த அணையின் பலம் குறித்து இரு மாநில மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கும் கருத்துக்களைக் கேரள மாநிலத்தவர் பகிர்ந்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் எனவும் கேரள மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், மு‌ல்லைப் பெரியாறு அணை குறித்து பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதா? என கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் நேற்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  முதலமைச்சர் பினராயி விஜயன், மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் உயிரிழக்க போவதாகவும் சமூக வலைத்தளம் மூலம் சிலர் வதந்தி பரப்புவதாக கூறினார். உண்மையில் அதுபோன்ற ஆபத்தான நிலை ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார். மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். அதேநேரம் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Tribute_MKStalin_Pipin Rawat

    முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: வெலிங்டன் மைதானத்தில் இருந்து உடல்கள் சூலூர் புறப்பட்டது

  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்