SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.48 கோடியை தாண்டியது: 49.69 லட்சம் பேர் உயிரிழப்பு

2021-10-26@ 07:32:38

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 24,48,02,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 49,69,862 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 22,19,35,396 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,78,96,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,78,21,923 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 74,981 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்