SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியது: 49.63 லட்சம் பேர் உயிரிழப்பு

2021-10-25@ 07:27:50

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 244,423,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,963,653 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 221,443,255 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,016,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,941,134 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 75,283 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்