ஆடி கியூ 5
2021-10-24@ 02:20:08

ஆடி நிறுவனம், கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கியூ5 எஸ்யுவி உற்பத்தியை ஓராண்டு முன்பு நிறுத்தியது. இந்நிலையில், புதிய பிஎஸ்6 தர நிலையிலான இன்ஜினுடன் புதிய காரை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவுடன் உள்ளது. புதிய அம்சங்களாக 48.26 செமீ (ஆர்19) 5 டபுள்-ஸ்போக் ஸ்டார் ஸ்டைல் அலாய் வீல்கள், ஆடி பார்க் அசிஸ்ட், சென்சார் கட்டுப்பாட்டுடன் கூடிய பூட்-லிட் ஆபரேஷனுடன் கம்போர்ட் கீ, பி&ஓ பிரீமியம் 3டி சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேம்பட்ட வெளிப்புற வடிவமைப்புடன் வருகிறது. முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ₹2 லட்சம் செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags:
ஆடி கியூ 5மேலும் செய்திகள்
கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி : வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள் என்னென்ன ?
Google Chrome new logo : 8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்
துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ விரைவில் அறிமுகம்
பிளாக்பெர்ரி மொபைலுக்கு குட் பை! ... கிளாசிக் சாதனங்களுக்கு அளித்து வந்த ஆதரவையும் நிறுத்துவதாக அறிவிப்பு!!
14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: துணை ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த அனுமதி
நவம்பர் 26ம் தேதி முதல் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஷாக்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!