கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் மேலாளர் ஊழியர் சஸ்பெண்ட்
2021-10-24@ 01:11:58

சென்னை: சின்ன மாத்தூர் ஆம்ஸ்ட்ராங் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால், குடிமகன்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தமிழ்நாடு வாணிப கழக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை ஆட்சியர் சுமதி, சம்மந்தப்பட்ட கடை ஊழியர்களான லட்சுமணன் மற்றும் மேலாளர் சேகர் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரித்தார்.
அதில், மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ₹10 கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து டாஸ்மாக் கடை மேலாளர் சேகர் மற்றும் ஊழியர் லட்சுமணன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்கப்பட்டாலோ அல்லது கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்..!
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு
டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை