காலில் திடீர் தசை பிடிப்பால் தவிப்பு இன்ஸ்பெக்டருக்கு முதலுதவி செய்த எஸ்பி: போலீசார் நெகிழ்ச்சி
2021-10-24@ 01:11:57

சென்னை: ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்த செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார், மதுராந்தகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட சென்றார்.அப்போது, எஸ்பியை வரவேற்க, இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வேகமாக ஓடி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு திடீரென காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது.
இதில் வலியால் துடித்த அவர், கால்களை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார். இதை கண்டதும், எஸ்பி விஜயகுமார், உடனடியாக அவரது கால்களை பிடித்து,முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், காவல்துறை வாகனத்தில் அவரை அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டவுடன், தானொரு எஸ்பி என்பதையும் மனதில் கொள்ளாமல், பொது இடத்தில் சிகிச்சையளித்த எஸ்பியின் செயல், அனைத்து போலீசாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகள்
வரும் 9-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்; காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
டெல்டா மாவட்ட விவசாயிககளுக்கு தங்கு தடையின்றி ரசாயன உரங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 500 அபராதம்; மாநகர காவல் துறை எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாளை திருவண்ணாமலை பயணம்
இளையராஜா, பி.டி. உஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்; அங்காடி அதிகாரி எச்சரிக்கை
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!