விஸ்கி விளம்பரத்தில் நடிப்பதா? நடிகை ரெஜினாவுக்கு கண்டனம்
2021-10-23@ 00:24:09

சென்னை: விஸ்கி விளம்பரத்தில் நடித்த நடிகை ரெஜினாவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரெஜினா. தற்போது பார்டர், பார்ட்டி, கள்ளபார்ட், சூர்ப்பனகை போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிரபல நிறுவனத்தின் விஸ்கி விளம்பரத்தில் நடித்து, அந்த போட்டோவையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாட்டிலில் இருக்கும் விஸ்கியை கிளாசில் ஊற்றி, பிறகு கிளாசை கையில் ஏந்தியபடி, விஸ்கியை கிளாசில் ஊற்றி எப்படி கலக்க வேண்டும், எந்த அளவுக்கு ஐஸ் சேர்க்க வேண்டும், ஐஸ் சேர்த்தால் என்ன சுவை, சேர்க்காவிட்டால் என்ன சுவை என்று பேசியிருக்கிறார். சினிமா நட்சத்திரங்கள் புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்படுத்துதல், ஆன்லைன் விளையாட்டு, மது விளம்பரங்களில் நடித்து இளைய சமுதாயத்தினரை கெடுக்கக்கூடாது என்ற பொதுவான விதி இருந்தும், நடிகை ரெஜினா இந்த விளம்பரத்தில் நடித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 59 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை; 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
வெளிச் சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை
சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்கிறோம்: சிலம்பரசன் அறிக்கை.!
மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் அதிக பரப்பளவில் பயிரிட வாய்ப்பு: ஓபிஎஸ் வரவேற்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன் தூர்வாரிவிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி
விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!