ஆறுமுகசாமி ஆணைய வழக்கு அக்.26க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
2021-10-22@ 00:02:07

புதுடெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது. ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,‘‘இந்த வழக்கில் புதியதாக வாதங்களை முன்வைக்க ஒன்றும் கிடையாது. ஏனெனில் ஏற்கனவே அனைத்தும் முடிந்து விட்டது.
மேலும் ஆணையத்தின் விசாரணையும் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னதாக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் நீக்க வேண்டும். இதில் வழக்கு விசாரணை வேண்டுமென்றே மருத்துவமனை தரப்பில் தாமதப்படுத்தப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கானது நேற்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வழக்கை ஒத்திவைக்ககோரி நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கை வரும் 26ம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Tags:
Arumugasami Commission case adjourned to Oct. 26 Supreme Court ஆறுமுகசாமி ஆணைய வழக்கு அக்.26க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!