SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.!

2021-10-21@ 18:10:27

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது. அதில் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி(46) என்ற பெண்  பயணம் செய்து கொண்டிருந்தார். மகேஸ்வரியின் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்தார்.

உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரழந்தார். பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

  • Chennai 05

    சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

  • Governer

    கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

  • planet Vaikundam

    ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

  • 04-12-2021

    04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்