பழநி- கொடைக்கானல் சாலையோரங்களில் விபத்துகளை தவிர்க்க புதர்களை அகற்றும் பணி தீவிரம்
2021-10-21@ 12:52:35

பழநி: விபத்துகளை தவிர்க்கும் வகையில் பழநி- கொடைக்கானல் சாலையோரங்களில் புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது. இத்தகைய கொடைக்கானலுக்கு பழநி வழியாகவும், கொடைரோடு வழியாகவும் செல்லலாம்.
தொடர் மழை காரணமாக பழநி- கொடைக்கானல் சாலையின் இருபுறங்களிலும் செடிகள் புதர்போல் முளைத்துள்ளன. இதனால் எதிரில் வாகனங்கள் வந்தால் ஒதுங்க முடியாத சூழல் நிலவி வந்தது. இதனை சரிசெய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பழநி- கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு வரை சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல் சாலையோர தடுப்புகளில் இரவில் எதிரொலிக்கும் ஸ்டிக்கர்களை அதிகளவு ஒட்ட வேண்டும். கொடைக்கானலில் ஆஃப் சீசன் துவங்க உள்ள நிலையில் விபத்து முன்னெச்சரிக்கையாக பழநி- கொடைக்கானல் சாலையின் இடைப்பட்ட பகுதியில் முதலுதவி மற்றும் மீட்பு மையம் ஏற்படுத்த வேண்டும். இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில குழுக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!
75 ஆண்டுகளுக்கு பின் கோடையில் மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : விவசாயிகள் மகிழ்ச்சி!!
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு
கும்மிடிப்பூண்டியில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
கவர்ச்சி திட்டங்கள் எதிரொலி!: தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 6 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை..!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளை!: மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை