டெல்லியில் வரும் 25ம் தேதி விழா; ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள்
2021-10-21@ 04:14:42

புதுடெல்லி: இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லியில் நடக்கிறது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமான்,
சிறப்பு திரைப்படத்துக்கான விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு வழங்கப்படும். இதே விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மற்றும் பல்வேறு மொழிகளில் தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்