SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவை முடிஞ்சதும் கழட்டி விட்டுட்டாங்க என மாம்பழத்தை நொந்துகொள்ளும் இலை தரப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-21@ 02:25:27

‘‘மாநில எல்லை சோதனை சாவடியில பண மழை பொழியுதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகம்- ஆந்திர மாநில எல்லையான காட்டுப்பாடி பக்கத்துல பேட்டைனு முடியுற ஏரியாவுல, மோட்டார் வாகன சோதனைச்சாவடி இருக்குது. இந்த சோதனை சாவடியில் பணிபுரியுற அலுவலருங்க செழிப்பா இருக்காங்களாம். சோதனை சாவடிய கடந்து போற வாகனங்கள் எல்லாமே, இவங்களுக்கு கப்பம் கட்டிகிட்டுத்தான் போகணுமாம். காய்கறி, பழங்கள், பூ, கொத்தமல்லி, கறிவேப்பிலைன்னு எந்த லோடு போனாலும் இவங்களுக்கு தனி பார்சல் கொடுத்தாத்தான் வாகனங்களுக்கு பர்மிஷன் கொடுப்பாங்களாம்.

அதேபோல, சீல் வைக்கப்பட்ட சரக்கு லாரிகள், கண்டெய்னர்கள் போச்சுன்னா, கரன்சி கொடுக்கணுமாம். இப்படி 24 மணிநேரமும் ஓய்வில்லாம கரன்சி பார்க்குறாங்களாம் அந்த சோதனைச்சாவடியில நடக்குற மேட்டரு வெயிலூர் விஜிலென்ஸ் காதுல விழுந்திருக்கு. அதன்பேர்ல தான் சமீபத்தில சோதனை சாவடியில் அதிகாலை நேரத்துல விஜிலென்ஸ் ேபாலீசாரு சோதனை நடத்தியிருக்குறாங்க. அப்போ, கணக்குல வராத ரூ77 ஆயிரம் பணம், காய்கறி, பழங்கள், பூ, கொத்தமல்லி, கறிவேப்பிலைன்னு மாமூலாக வாங்கி வெச்சிருக்குறது வெளிச்சத்துக்கு வந்துச்சு.

இதனால, கொஞ்ச நாளைக்கு, சரக்கு லாரிங்க எந்த தடையுமில்லாம போய்டு வந்துச்சாம். இப்ப திரும்பவும் அந்த சோதனை சாவடியில பண மழை பெய்யத் தொடங்கியிருக்குறதா பேசிக்கிறாங்க. அந்த சோதனைச்சாவடியில மட்டுமில்லாம, தனியாக காக்கிகள் சோதனைச்சாவடியிலயும் அடைமழை பெய்யுதாம். இந்த மாநில எல்லை சோதனைச்சாவடியில ஸ்ட்ரிட்டான அலுவலர்களையும், காக்கிகளையும் நியமிச்சா, பல கள்ளக்கடத்தல், செம்மரக்கடத்தல், கஞ்சா கடத்தல் எல்லாத்தையும் தடுத்து நிறுத்த முடியுமாம். அதனால ஸ்ட்ரிட்டான அலுவலர்களை நியமிக்கணும்னு சமூக ஆர்வலருங்க எதிர்பார்க்குறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேவைக்கு மட்டுமே எங்களை பார்ப்பாங்கனு இலை கட்சி பிரமுகர்கள் புலம்புறாங்களாமே..’’‘‘பார்லிமென்ட் எலக்‌ஷன் மட்டுமில்லாம, கடந்த அசெம்பிளி எலக்‌ஷன்ல இலையும், மாம்பழமும் கூட்டணி போட்டாங்க. அப்போது எங்களுக்குள் இயல்பாக அமைந்த கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி என்றெல்லாம் உதார் விட்டாங்க. இதில் மாஜி விவிஐபியின் சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்தில் இரண்டு கட்சி நிர்வாகிகளும் அவ்வளவு அன்ேயான்யமாக இருந்தாங்க. அதிலும் மாஜி விவிஐபி ஊருக்கு வந்தால் உடனடியாக சென்று வரவேற்பவர்கள் மாம்பழகட்சி முக்கிய நிர்வாகிகள்தானாம்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி தொடரும் என்று அப்போது சிலாகிப்பாங்களாம். ஆனால் கடந்த சில மாதங்களாக இது அப்படியே தலைகீழா மாறிவிட்டதாம். ஊருக்கு வரும் மாஜி விவிஐபியை ஒப்புக்கு கூட யாரும் சென்று பார்ப்பதில்லையாம். கேட்டால் மக்களுக்காக உழைக்கிறதுக்கே எங்களுக்கு நேரம் போதலை. அப்புறம் அவரை எப்படி சென்று பார்ப்பது என்று நக்கலடிக்கிறாங்களாம் மாம்பழகட்சிகாரங்க. ஆனால் இலைகட்சிகாரங்களோ, அவங்க எப்பவுமே தேவைக்கு மட்டுமே எங்களை வந்து பார்ப்பாங்க என்பது நல்லாவே தெரியும். அதனால, எலக்‌ஷன் நேரத்துல அவங்க சொன்னதையெல்லாம் நாங்க ஒரு பொருட்டாகவே எடுத்துக்கல என்று பதிலடி கொடுக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொந்த கட்சிக்குள் வெளியே தெரியாமல் இருந்த உட்கட்சி பூசல்.. பொன்விழாவில் வெட்ட வெளிச்சமாகி போச்சாமே...’’ ‘‘தொண்டைமான் மாவட்டத்தில் அறந்தை தொகுதியில் இலை கட்சி மாஜி எம்எல்ஏவாக இருந்தவர் கடைசி பெயர் கொண்டவர் நாயகம். தெற்கு மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு கடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட மாஜி அமைச்சர் வைத்தியமானவர் மூலம் வாய்ப்பு கிடைத்தது. ஆனால்..அப்போது மாவட்ட அமைச்சராக இருந்த கடைசி பெயர் கொண்டவரான பாஸ்கருக்கு பிடிக்கவில்லையாம்...இதை தொடர்ந்து பாஸ்கரனின் ஆதரவாளர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியது.

ஆனால்... தலைமை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டதால் பாஸ்கர் ஆதரவாளர்கள் பெயரளவில் தேர்தல் பணியாற்றியதால் வேட்பாளர் தோல்வியடைய காரணமாம்.. இதனால் நாயகம் தரப்பினர் முக்கிய நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாம்.. இலைகட்சி 50வது ஆண்டு பொன்விழாவில் அறந்தை ெதாகுதியில் மாஜி எம்எல்ஏ அவரது ஆதரவாளர்களுடன் கோட்டைப்பட்டினத்தில் கட்சி கொடியேற்றியதோடு கேக் வெட்டி பொன்விழாவை விமர்சையாக கொண்டாடினாராம்.. இந்த பொன்விழா நிகழ்ச்சி குறித்து அந்த பகுதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்களுக்கு தெரிவிக்க வில்லையாம்...

இதனால் கோபத்தில் உச்சத்துக்கு சென்ற நிர்வாகிகள் பதிலுக்கு ஆதரவாளர்களுடன் படைசூழ விழா நடந்த இடத்துக்கு சென்றார்களாம்.. மாஜி எம்எல்ஏ ஏற்றிய கொடியை கீழே இறக்கிவிட்டு, அதே கம்பத்தில் மீண்டும் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மாஜி எம்எல்ஏவுக்கு போட்டியாக மாஸ்காட்டினார்களாம்... சொந்த கட்சிக்குள்ளே வெளியே தெரியாமல் இருந்த உட்கட்சி கோஷ்டி பூசல் ஈகோ பிரச்னையால் பொன்விழாவில் வெட்ட வெளிச்சமாகி போச்சே என்று கட்சிக்காரர்கள் நொந்துகொண்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்