SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர் சரிவு: ஒரு சவரன் ரூ.35,696-க்கும் ஒரு கிராம் ரூ.4,462க்கும் விற்பனை!!

2021-10-18@ 10:22:49

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.24குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி உயர்வையும் சந்தித்து வந்தது. இதனால் நகை வாங்குவோரிடையை ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டு வந்தது. எங்கே நகை வாங்கினால், மறுநாள் குறைந்து விடுமோ?. என்ற ஏக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி ஒரு சவரன் ரூ.35,632க்கு விற்கப்பட்டது. 14ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

அன்றைய தினம் கிராமுக்கு ரூ.73 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,527க்கும், சவரனுக்கு ரூ.584 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,216க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 15ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4515க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.36,120க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் ரூ.4465க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.35,720க்கும் விற்கப்பட்டது.

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இந்த நிலையில் இன்று மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலை ரூ.24 குறைந்து சவரன் ரூ.35,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3 குறைந்து ரூ.4,462-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி அடுத்த மாதம் 4ம் தேதி வருகிறது. அதற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. தீபாவளி நேரத்தில் நகை வாங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது நகை வாங்க நினைப்போருக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Tribute_MKStalin_Pipin Rawat

    முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: வெலிங்டன் மைதானத்தில் இருந்து உடல்கள் சூலூர் புறப்பட்டது

  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்