SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோனார்க் கோயில் போல் அயோத்தியிலும் கருவறை: சூரிய கதிர்களின் வெளிச்சம் பாயும்

2021-10-18@ 01:21:38

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி அன்று சூரிய கதிர்கள் விழும் வகையில் கருவறை வடிவமைக்கப்பட இருப்பதாக ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்தார். இது குறித்து அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறுகையில், ‘‘ஒடிசாவில் 13வது நூற்றாண்டை சேர்ந்த கோனார்க் கோயிலில் சூரிய கதிர்கள் கருவறையில் விழுவது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ஒவ்வொரு ஸ்ரீராமநவமி தினத்திலும் அயோத்தி ராமர் கோயிலில் சூரிய கதிர்கள் விழும் வகையில் கருவறை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஞ்ஞானிகள், வானியியல் வல்லுனர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

மேலும், தேசிய கட்டிட கலை நிறுவனம், டெல்லி ஐஐடி, மும்பை, ரூர்கே ஐஐடி நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறோம்,’’ என்றார். மற்றோரு மூத்த உறுப்பினர் கூறுகையில், ‘‘அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2023 டிசம்பருக்குள் கோயில் கட்டப்பட்டு மக்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும். முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.  2ம் கட்ட பணிகள் நவம்பரில் நிறைவடையும். கோயில் அருகில் நதி இருப்பதால், நில அதிர்வு போன்ற பூகோள ரீதியான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Tribute_MKStalin_Pipin Rawat

    முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: வெலிங்டன் மைதானத்தில் இருந்து உடல்கள் சூலூர் புறப்பட்டது

  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்