SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்வெளியில் ஷூட்டிங்கை முடித்து பூமிக்கு திரும்பிய ரஷ்ய நடிகை

2021-10-18@ 01:20:02

மாஸ்கோ: ‘தி சேலஞ்ச்’ என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கை விண்வௌியில் முடித்துக்கொண்டு நடிகை மற்றும் குழுவினர் பூமிக்கு திரும்பினர். ரஷ்யாவை சேர்ந்த இயக்குனர் கிளிம் ஷிபென்கோ உருவாக்கும் படம், ‘தி சேலஞ்ச்’. விண்வெளியில் ஏற்படும் மருத்துவ நெருக்கடி தொடர்பான கதை ெகாண்ட இப்படத்துக்காக கிளிம் ஷிபென்கோ, நடிகை யூலியா பெரெசில்ட், விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோர், கஜகஸ்தானில் இருக்கும் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து, கடந்த 5ம் தேதி சோயூஸ் எம்எஸ்-19 ராக்கெட் மூலம் விண்வெளி சென்றனர்.

தொடர்ந்து 12 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஷூட்டிங் நடத்திவிட்டு, நேற்று ராக்கெட் மூலம் பூமிக்கு பத்திரமாக திரும்பினர். அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரர், தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்