SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒமான் அபார வெற்றி

2021-10-18@ 01:18:36

அல் அமெரட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் தகுதிச் சுற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஒமான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது. அல் அமரெட் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஒமான் அணி முதலில் பந்துவீசியது. பப்புவா நியூ கினியா அணியின் தொடக்க வீரர்கள் டோனி உரா, லெகா சியகா இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில், கேப்டன் ஆசாத் வாலா - சார்லஸ் அமினி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தனர். சார்லஸ் 37 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆசாத் வாலா 56 ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, பப்புவா நியூ கினியா மீண்டும் தடுமாறியது. செசெ பாவ் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. கபுவா மோரியா 6 ரன், நொசைனா போகனா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒமான் பந்துவீச்சில் ஜீஷன் மக்சூட் 4, பிலால் கான், கலீமுல்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஒமான் அணி களமிறங்கியது. ஆகிப் இலியாஸ், ஜதிந்தர் சிங் இருவரும் துரத்தலை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஒமான் அணி 13.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 131 ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. ஆகிப் இலியாஸ் 50 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஜதிந்தர் சிங் 73 ரன்னுடன் (42 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒமான் அணி 2 புள்ளிகளை தட்டிச் செல்ல, பந்துவீச்சில் அசத்திய ஜீஷன் மக்சூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்