SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 50 மூட்டை ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்: ஆந்திர டிரைவர் கைது

2021-10-18@ 01:14:12

திருத்தணி:  திருத்தணி பகுதியில் இருந்து மினி லாரியில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். திருத்தணி அடுத்த ராமஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அவரின் உத்தரவின்படி, சிறப்பு படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ராமஞ்சேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை நடத்தியபோது ஒரு மினி லாரியில் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்(27) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணித்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்