SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா சமாதியில் கண்கலங்கிய சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

2021-10-17@ 01:36:56

சென்னை: அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்டவர்  சசிகலா. ஜெயலலிதா சமாதிக்கு போகட்டும், கண் கலங்கட்டும். இந்த நடிப்புக்கு ‘ஆஸ்கர்  அவார்டு’ வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், அதிமுகவில் அவருக்கு  எப்போதும் இடம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடத்துக்க தினசரி லட்சக்கணக்கான பேர் போவார்கள். அதேமாதிரி லட்சத்தில் ஒருவராக சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அவர், ஜெயலலிதா சமாதிக்கு போனது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவது இல்லை.

அதிமுக மிகப்பெரிய யானை. பெரிய பலம் பெற்றது. ஏதோ கொசு, யானை மீது உட்கார்ந்து, நான்தான் யானையை தாங்கிக் கொள்கிறேன் என்றால், மக்கள் இதை எள்ளி நகையாடும் விஷயமாகதான் இருக்கும். ஜெயலலிதா சமாதிக்கு எல்லோரும் போறாங்க, சசிகலாவும் நேற்று போயுள்ளார். 17ம் தேதி (இன்று) தான் அதிமுக பொன்விழா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி (நேற்று) எப்படி பொன்விழா ஆண்டு ஆகும். அதுகூட சசிகலாவுக்கு தெரியவில்லை. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு தார்மீக உரிமை கிடையாது. சட்டப்படியான விதிமீறல். அவர், வேண்டும் என்றே அதிமுக கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா நினைக்கிறார். நாங்கள் நினைத்தால் தடுக்கலாம்.

ஆனால், நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க விரும்பவில்லை.அரசியலில் தனக்கு ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்றால், சசிகலாவுக்கு டி.டி.வி.தினகரன் அமமுகவில் ஒரு நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிமுக கூடிய விரைவில் எனது கட்டுப்பாட்டில் வரும் என்று சசிகலா சொல்லிக் கொண்டே இருக்கலாம். அது நடக்காது. சசிகலா என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டே போகலாம். நாங்கள் எந்த தடையும் இல்லாமல் அதிமுகவை, நாங்கள் வழிநடத்தி வருகிறோம். சசிகலாவுக்கு அதிமுகவில் எந்த இடமும் கிடையாது.

தேவைப்பட்டால் அமமுகவில் அவருக்கு பதவி கொடுக்கலாம். அறிக்கையில் எழுதி கொடுப்பதை கூறி, என்ன வேண்டுமானாலும் பேசலாம். மக்களின் உண்மையான தலைவராக ஜெயலலிதாதான் உள்ளார். இவரை தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்டவர்தான் சசிகலா. சமாதிக்கு போகட்டும், கண் கலங்கட்டும். இந்த நடிப்புக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், அதிமுக கட்சிக்காரர்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக கட்சியிலும் அவருக்கு எப்போதும் இடம் கிடையாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • christmas-30

  நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்