SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரன் ரூ.400 குறைந்தது

2021-10-17@ 00:28:46

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி உயர்வையும் சந்தித்து வந்தது. இதனால் நகை வாங்குவோரிடையை ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டு வந்தது. எங்கே நகை வாங்கினால், மறுநாள் குறைந்து விடுமோ?. என்ற ஏக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி ஒரு சவரன் ரூ.35,632க்கு விற்கப்பட்டது. 14ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

அன்றைய தினம் கிராமுக்கு ரூ.73 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,527க்கும், சவரனுக்கு ரூ.584 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,216க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 15ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4515க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.36,120க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் ரூ.4465க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.35,720க்கும் விற்கப்பட்டது.

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும். தீபாவளி அடுத்த மாதம் 4ம் தேதி வருகிறது. அதற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. தீபாவளி நேரத்தில் நகை வாங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது நகை வாங்க நினைப்போருக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்