SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வரின் முயற்சி

2021-10-17@ 00:28:38

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது.  இந்த ஆண்டு 2,300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 90 சதவீதம் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி பட்டாசு வெடிக்க தடை விதிப்பது வாடிக்கையாகிவிட்டது. கேட்டால், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை என்கின்றனர். அடப்பாவிகளா? வாகனங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வருடம் 365 நாளும் ஏற்படுத்தும் காற்று மாசைவிட ஒரு நாள் மட்டுமே வெடிக்கும் பட்டாசு பெரிய ஆபத்தையா ஏற்படுத்திவிடப்போகிறது?.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில வகையான பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அப்படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் உட்பட அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிப்பது நியாயம் தானா?
இந்தியாவின் பட்டாசு தலைநகரம் சிவகாசி. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசு உற்பத்தி ஆகிறது. பட்டாசு என்பது  8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம்.

கடந்த 2020ல் கொரோனா பரவல் காரணமாக சுமார் ரூ.1000 கோடி அளவில் பட்டாசு தேங்கியது. இதனால், இந்த ஆண்டு உற்பத்திக்கு சிவகாசியில் காலதாமதமாகவே பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்க முடிந்ததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ள டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பதவி ஏற்ற நாள் முதல் தமிழகம், தமிழக மக்களை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் முதல்வர், சரியான காரணங்கள் இல்லாமல் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தாங்கள் தடை விதித்திருப்பது சரியானதல்ல.

இதுபோன்ற தடை உத்தரவுகள் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும். இது தொடர்ந்தால் பட்டாசு தொழிலை மூட வேண்டிய நிலை வரும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் முயற்சிக்கு உடனடியாக கைமேல் பலன் கிடைத்துள்ளது. அவரது கடிதம் கிடைத்ததும் ராஜஸ்தான் அரசு பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளது. மற்ற மாநில அரசுகளும் இதே போன்ற முடிவை விரைவில் எடுக்கும். தீபஒளி திருநாளாம், தீபாவளியையொட்டி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி வெள்ளம் பாயச் செய்ய முயற்சி எடுத்துள்ள முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்