போலி மருத்துவர் மீண்டும் கைது
2021-10-16@ 01:52:30

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் பி.எஸ்.சி படித்துள்ளார். இந்நிலையில் பூண்டி பஜாரில் ஸ்ரீ மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். மிகவும் பின்தங்கிய கிராமமான பூண்டியில் உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மருந்து, மாத்திரை தருவதை வாடிக்கையாக்கிய சீனிவாசன், காலப் போக்கில் தான் ஒரு மருத்துவர் என்று சொல்லி உடல் நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரை வழங்குவதுடன் ஊசியும் போட்டு வந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் கடந்த 27.9.19 அன்று சுகாதாரத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த சீனிவாசன் மீண்டும் அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து பூண்டி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் போலி மருத்துவர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுகாதார துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஒரே நேரத்தில் 3 பைக் திருட்டு
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
கத்தியை காட்டி வழிப்பறி: வாலிபர் கைது
திருப்பூர் அருகே பயங்கரம் தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா? கள்ளக்காதலனா?
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை