உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் ஆத்திரம் கார் டிரைவருக்கு சரமாரி கத்தி குத்து
2021-10-16@ 01:52:02

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஊராட்சி கூத்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தம் (39). இவரது மனைவி சலினா மேரி (33). சலினா மேரியின் சகோதரர் ஜோசப் (37), அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரான்சிஸ் (30), சந்தோஷ் பெர்ணான்டஸ் (29) ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பையனூர் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலின்போது, சலினா மேரியின் சகோதரர் ஜோசப், நண்பர் பிரான்சிஸ், சந்தோஷ் பெர்ணான்டஸ் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தபோது, வாக்களிக்க வராமல் கார் ஓட்ட சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோசப், நேற்று முன்தினம் நள்ளிரவு பிரான்சிஸ் வீட்டுக்கு சென்றார். அங்கு, எதற்காக நீ வாக்களிக்க வரவில்லை என கேட்டு தகராறு செய்தார். மேலும், பிரான்சிசை சரமாரியாக தாக்கினார். இதில், பிரான்சிஸ் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் சந்தோஷ் பெர்ணான்டஸ், அங்கு ஓடிவந்து ஜோசப்பை தட்டிக் கேட்டார். அதற்கு, எனது சகோதரி தோல்விக்கு பிரான்சிஸ்தான் காரணம் என கூறி, மீண்டும் அவரை தாக்கினார். இதையடுத்து சந்தோஷ் பெர்ணான்டஸ், 2 பேரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி வலியுறுத்தியாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஜோசப், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சந்தோஷ் பெர்ணான்டசை சரமாரியாக குத்தினார். இதில், சந்தோஷ் பெர்ணான்டஸின் வயிற்றில் இருந்து குடல் வெளியே சரிந்து விழுந்தது. அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து போலீசார், ஜோசப்பை பிடித்து விசாரித்தனர். அதில், நான் தான் சந்தோஷ் பெர்ணான்டஸை கத்தியால் குத்தினேன் என அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், ஜோசப்புக்கு பக்கபலமாக இருந்த அவரது அண்ணன் பெர்னாடு (42), அருளானந்தம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். மாமல்லபுரம் அருகே உள்ளாட்சி தேர்தல் தோல்வி சம்பந்தமாக நள்ளிரவில் நடந்த கத்தி குத்து சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்