மக்கள் குறைகளை கேட்டபோது இங்கிலாந்து சர்ச்சில் எம்பி குத்திக்கொலை
2021-10-16@ 01:49:54

லண்டன்: இங்கிலாந்தில் தேவாலயத்தில் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு கொண்டிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி டேவிட் அமெஸ், கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கிழக்கு லண்டனின் கடற்கரை நகரமான லீ-ஆன்-சீயில் உள்ள பெல்பேர்ஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் தனது தொகுதி மக்களை ஒவ்வொரு வாரமும் சந்திப்பதை கன்சர்வேடிவ் கட்சி எம்பி டேவிட் அமெஸ் வழக்கமாக கொண்டிருந்தார். 69 வயதான இவர், கடந்த 1983 முதல் சவுத் என்ட் வெஸ்ட் தொகுதி எம்பி.யாக இருந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று தேவாலயத்தில் மக்களை சந்தித்து கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் கத்தியால் அவரை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். அவரை கத்தியால் குத்திய 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்!: கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்ற பாதுகாப்பு படை..கல்வீச்சால் பரபரப்பு..!!
இந்தியாவில் கொரோனா இறப்பு அதிகம் என அறிக்கை : உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!!
உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை நெருங்கியது!!
ஆஸ்திரேலிய பிரதமராக அல்பானீஸ் பதவியேற்பு
பிலிப்பைன்சில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு: 7 பேர் பலி
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை