தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,259 பேர் பாதிப்பு; 20 பேர் பலி; 1,438 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..!
2021-10-14@ 19:36:19

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,259 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,259 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,83,396 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 15,451 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,37,423 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,90,17,492 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 719 பேர் ஆண்கள் மற்றும் 540 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,438 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,32,092 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 20 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,853 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 163பேரும், கோவையில் 143 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை
திருப்பதியில் கங்கனா தரிசனம்
தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்
மீண்டும் தெலுங்கு படம் இயக்கும் சமுத்திரகனி
8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்த நயன்தாரா
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!