SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் தொல்லையால் காங்கிரஸ் கட்சி பிரமுகர் கழுத்தை அறுத்து தற்கொலை

2021-10-14@ 00:54:18

சென்னை: வியாசர்பாடி எம்கேபி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் சந்த்(55). இவர் எம்கேபி நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் பாலாஜி ரெடிமேட் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும் ஜெய, நேகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயஸ்ரீ திருமணம் முடிந்து கணவரோடு வாழ்ந்து வருகிறார். ஹரிஷ்சந்த் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த 2 வருடங்களாகவே இவர் நடத்திவரும் துணிக்கடை வியாபாரம் பெரிய அளவு கைகொடுக்காத நிலையில் தொடர்ந்து கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி அவருடைய இரண்டாவது மகள் நேகாவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஹரிஷ்சந்த் மகள் திருமணத்திற்கு தேவையானவற்றை செய்ய முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் காய்கறி வெட்டும் கத்தியால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஓடிவந்த மகள் நேகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கல்வியரசன் உள்ளிட்டோர் ஹரிஷ்சந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னைக்காக யாரேனும் ஹரிஷ்சந்தை மிரட்டினார்களா அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்