SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசு அன்பளிப்பில் பல லட்ச முறைகேடு குறித்து விசாரணை வரப்போவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-14@ 00:04:56

‘‘அ திமுக ஆட்சியின் கடைசி காலத்தில், சென்னை டியுசிஎஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்களாக இருந்த இரண்டு உயர் அதிகாரிகள் பற்றி அடுக்கடுக்காக புகார்கள் எழுந்து வருகிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இந்த அதிகாரிகள் தங்களது நலன் மட்டுமே முக்கியம் என கருதி செயல்பட்டுள்ளனர். இதில் ஒருவர், சாலீஸ்பரி டீத்தூள் என்ற அறிமுகம் இல்லாத டீத்தூளை வாங்கி ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்த வகையில் சுமார் ரூ.23 லட்சம் முறைகேடு புரிந்துள்ளதாக கூறி, துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. மேலும் கோவிட்-19 காலத்தில் கொள்முதல் செய்த அனைத்து பொருட்களும் ஒப்பந்தப்புள்ளி பெறாமலும், கொள்முதல் செய்த பொருட்களை காட்டிலும் அதிகபட்ச தொகை வியாபாரிகளுக்கு கொடுத்து அதன்மூலம் பல லட்சம் ரூபாய் கமிஷனாக பார்த்துள்ளார். இதுகுறித்து  தற்போது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
இரண்டாவது அதிகாரி, குறைந்த விலையில் டியுசிஎஸ் நிறுவனத்திற்கென உள்ள கட்டிடங்களை பழுதுபார்த்துவிட்டு, மிக அதிக தொகையில் வேலை நடந்துள்ளதாக கணக்கு காட்டி பல கோடிகளை சுருட்டி உள்ள தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இப்படி, அதிக தொகைக்கு ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்தது, கட்டிடங்களுக்கு குறைந்த செலவு செய்து அதிக பணம் கொள்ளையடித்தது குறித்து, டியுசிஎஸ் பணியாளர் தொழிற்சங்கங்கள் சார்பில் முதல்வர், கூட்டுறவு துறை அமைச்சர், பதிவாளரை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனையில் பல லட்சம் முறைகேடு புரிந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. ரூ.11 லட்சம் அளவிற்கு மேல் அதிகாரிகளுக்கு பட்டாசு அன்பளிப்பாக வழங்கியதும் அம்பலமாகியுள்ளதால், இதுகுறித்தும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. இதுதவிர, தனியாக வெளிமார்க்கெட்டில் இருந்து பட்டாசு ரகங்கள் வாங்கி, தெரிந்த ஊழியர்கள் மூலம் விற்று பணம் பார்த்துள்ளனர். இதுபோன்ற ஊழலுக்கு அப்போதைய அதிமுக அமைச்சரும் உடந்தையாக இருந்துள்ளார்.
பல்வேறு புகார்களை தொடர்ந்து டியுசிஎஸ் நிறுவனத்தில் கொள்ளை அடித்ததற்காக தற்போதைய புதிய அரசு இவர்களை பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. ஆனாலும் இந்த இரண்டு அதிகாரிகளும், திரும்பவும் துறையின் உயர் அதிகாரிகளுக்கு பணத்தை கொடுத்து, மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனராம். இந்த ஊழல் அதிகாரிகளுக்கு டியுசிஎஸ்சில் மீண்டும் பணி வழங்காமல், இந்த அதிகாரிகள் மீது துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டியுசிஎஸ் நிறுவனத்தின் தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஒரே குரலில் தற்போது குரல் எழுப்பி வருகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஹனிபீ  மாவட்டத்தில் பழைய ஆட்சிக்கு வேண்டிய காக்கி ஆட்களால் குற்றத்தடுப்பு பணிகள் சுணங்கிக்  கிடக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான். இந்த மாவட்டத்தில் உள்ள பட்டியில் முடியும் ஊர்ப்பகுதியில் டூவீலர் திருட்டு, நகை திருட்டு சம்பவங்கள் மீது விரைவான நடவடிக்கை  இல்லையென்ற புலம்பல் இப்பகுதி மக்களிடம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு பெண்  எஸ்ஐயின் மாமனார், தான் அடகு வைத்திருந்த நகையை திருப்பி டூவீலரில் வைத்திருந்தபோது,  ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம் பட்டப்பகலிலேயே திருடு போனது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை இதுவரை  கண்டுபிடிக்கும்  முயற்சி இல்லையாம்.  இப்பகுதியின் ‘‘உளவு, குற்ற  காக்கி’’கள்தான் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் அதிக கவனம் காட்ட வேண்டும். ஆனால்  இவர்களோ அதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லையாம்... பொதுமக்கள் மட்டுமல்ல...  துறை சார்ந்தவர்கள் வீட்டில் கொள்ளை போனாலும் இந்த நிலைதானாம்...  இப்பகுதியில் திருட்டில் ஈடுபடுவோர் திருச்சி பகுதியில் இருப்பது  தெரிந்தும், காக்கிகள் அங்கு சென்று விசாரிப்பதில் தயக்கம் காட்டி  வருகிறார்களாம்... கடந்த ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்த  காக்கிச்சட்டைகளில் பலர், தற்போது வரை தொடர்ந்து பணியில் உள்ளனர். அதனால்தான் இந்த தூங்குமூஞ்சித்தனமான செயல்பாடாம். உயரதிகாரிகள் கொஞ்சம் கண்காணித்து,  ‘‘பழைய ஆட்களை’’ களைந்தெடுத்தால் காக்கித்துறை  சுறுசுறுப்படையும்  என்கின்றனர் இப்பகுதி மக்கள்...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘எலைட் டாஸ்மாக் கடையில் கல்லா கட்டுகிறார்களாமே..’’
‘‘வெயிலூர் மாநகரத்தில் எலைட் டாஸ்மாக் கடையில் சங்கமான பெயர் கொண்ட சூபர்வைசரும், பிரபல காமெடி நடிகர் பெயர் கொண்ட விற்பனையாளரும் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஆட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளதாம். டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவுகளை ஒன்று கூட மதிப்பது இல்லையாம். குறிப்பாக எம்ஆர்பி விலையை விட அதிகமாக விலைக்கு விற்பனை செய்தும், பில் போடாமலும் கல்லா கட்டி வருகின்றனர். தனியார் மதுபான கம்பெனி ஆட்களை வைத்தே வியாபாரம் வெகுஜோராக நடந்து வருகிறது. இதை மோப்பம் பிடித்துக் கொண்ட சில போலி நிருபர்களும் சென்று மிரட்டி பணம் பறித்து வருகிறார்களாம். இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • transformer

  இனி பவர் கட் இருக்காது....நவீன டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் ஊழியர்கள்

 • Garbage_floods_Chennai

  சென்னையில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகள்

 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்