ஊட்டியில் அதிகாரிகள் கலக்கம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் சிக்கியது
2021-10-14@ 00:03:48

ஊட்டி: ஊட்டியில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190 சிக்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக கனகராஜ் உள்ளார். இந்நிலையில், நேற்று பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகளிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. இது குறித்து வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டியில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியது மற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Ooty Officers Municipality Office of the Assistant Director Corruption Eradication Department Raid ஊட்டி அதிகாரிகள் பேரூராட்சி உதவி இயக்குநர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுமேலும் செய்திகள்
கடல் பாசி சேகரிக்கச்சென்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராமேஸ்வரத்தில் சாலை மறியல்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117.92 அடியாக உயர்வு காவிரி டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறப்பு
துவாக்குடி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அமர்க்களம்: 300 வீரர்கள் பங்கேற்பு
பூந்தமல்லி அருகே பரபரப்பு தலை, கைகளை துண்டித்து வாலிபர் எரித்துக்கொலை?: குப்பை மேட்டில் உடல் வீச்சு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!