SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாராட்டு பத்திரம்

2021-10-13@ 00:08:14

மே 7ம் தேதி பதவி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அளித்த 505 வாக்குறுதிகளில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்ததற்கான பாராட்டு பத்திரம் தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த அமோக வாக்குகள். அதனால் தான் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது. 140 மாவட்ட கவுன்சிலர், 1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட முழுவெற்றி பெறும் அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறது. ஒருசில கவுன்சிலர் இடங்கள் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு கிடைத்து இருக்கிறது.

இந்த மிகப்பெரிய வெற்றி திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவே பார்க்க முடிகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், இப்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து வெற்றி மழையை அவர்கள் வழங்கி திமுக அணி மீதான நம்பிக்கையை மக்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை காப்பாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மே 7ல் இருந்து இன்று வரை இமை மூடாமல் உழைத்து வருகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை. மக்களின் மனங்களை அறிந்து அதற்கு ஏற்றார்போல் அத்தனை வாக்குறுதிகளும் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முக்கிய பிரச்னைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தமிழகம் இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத்தால் முன்னேற்ற பாதையில் தற்போது பயணம் செய்யத்தொடங்கி இருக்கிறது.

அதனால் தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடனேயே எதைப்பற்றியும் கவலைப்படாமல் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி,  ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது, அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு என  தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும், எனது மனசாட்சியும்தான். நீங்கள் உத்தரவிடுங்கள், உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன்” என்று அடிக்கடி சொல்பவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். தங்கள் வாக்குகள் மூலம் உள்ளாட்சியிலும் நல்லாட்சி வழங்க மக்கள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதைத்தான் இந்த வெற்றி உறுதிப்படுத்துகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்