ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அக்கா- தங்கை வெற்றி
2021-10-13@ 00:05:15

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் போட்டியிட்ட அக்கா- தங்கைகள், ஊராட்சி தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கண்ரங்கம். இவரது மகள்கள் மாலா சேகர் (50) மற்றும் உமா கண்ரங்கம் (48) ஆகியோர் கடந்த 6ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் காவேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாலா சேகர் போட்டியிட்டு 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது தங்கை உமா கண்ரங்கம் ஜோலார்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 1972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா- தங்கை தலைவர் பதவிக்கும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதை அப்பகுதி மக்கள் பாராட்டி வரவேற்றனர்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு
குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50: ஒன்றிய அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!