SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியில் அவை தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை சொல்கிறார் wiki யானந்தா

2021-10-13@ 00:04:53

‘‘ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம்..’ பாடலுக்குள்ள நபரை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

கோவை ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில், தீபாவளி தற்காலிக பட்டாசு aகடை அமைப்பதற்காக, தடையின்மை சான்று (என்ஓசி) கோரும் விண்ணப்பம் குவியுதாம். கரன்சி கொடுத்தால் விண்ணப்ப குவியல் குறைகிறதாம். இல்லாவிட்டால் மனுக்கள் குவிவதை தடுக்க முடியலையாம். அதேநேரம், கரன்சியால் பேசினால், மனுக்கள் மலைபோல் கரைந்து லைசென்ஸ் வியாபாரி கைக்கு சென்றுவிடுகிறதாம். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க, வசூலுக்காக உதவி தீயணைப்பு அதிகாரி மற்றும் தீயணைப்பு வீரர்களை பயன்படுத்துறாராம். என்ஓசி சான்றிதழ் என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து, 2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சுருட்டிவிட்டாராம். இலைக்கட்சி விசுவாசியான இவர், புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி வருகிறார். கோவையில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட, இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிதான் தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், அதிலும் இவர் தலையிட்டு, பல லட்சங்களை சுருட்டுகிறாராம்.. இப்படி பணம் சுருட்டுபவரின் பெயரை தான் நீங்களே பாட்டில் சொல்லிட்டீங்களே... பட்டாசு விற்பனையாளர்களும், இந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது...’’ என்று பாடியபடி திரியும் அந்த இலை தலைவர் யாருன்னு சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்டத்தை சேர்ந்த சிவந்தமலை, அண்ணாவின் பேச்சால் அரசியலுக்கு இழுக்கப்பட்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாராம். இலை ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவராம். இலையின் ஆட்சியின்போது தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செஞ்சு வச்சிருக்காராம். இப்படி அம்மையாரிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தாராம் சிவந்தமலை. இதனால  ஏன் அவைத்தலைவர் பதவி கொடுக்க கூடாது. அவருக்கு என்ன தகுதி இல்லன்னு அவரது ஆதரவாளர்கள் கொக்கரிக்கிறாங்களாம். ஆனா, அதே நேரத்துல சிவந்தமலையோ, இரட்டை தலைமையும் என் மீது நல்ல நம்பிக்கை வைச்சு இருக்காங்க. எனது திறமையை நல்லா தெரிஞ்சவங்க. கட்சியின் முதன்மை சீனியராக இருக்கேன். என்னை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்... எனக்கு தான் அவைத் தலைவர் பதவி கிடைக்கும்னு தன் அடிப்பொடிகளிடம் சிலாகித்து வருகிறாராம். ஆனால், சேலம்காரரோ என் பேச்சை தட்டி பேசாத நபருக்குதான் நான் தருவேன்னு சொல்றாராம். அவைத் தலைவர் என்னுடைய ஆதரவாளர்... அதனால அந்த பதவியை நான் சொல்லும் நபருக்குதான் தரணும்னு முரண்டு பிடிக்கிறாராம். இதனால, அவைத் தலைவர் விஷயம் இலை கட்சியில் பெரிதாக வெடித்து, இரண்டாக பிளந்தாலும் வேற எதுவும் சொல்வதற்கு இல்லை... இந்த நிலையில் சிவந்தமலை தான் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடிக் கொண்டிருக்கிறாராம்... உள்குத்து தெரியாமல் பாட்டு பாடுறாரே என்ற தொண்டர்கள் சிரிக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இந்த பாடலை கேட்டவுடன்... லஞ்சம் பற்றி ஏதாவது ஞாபகத்துக்கு வருதா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாநிலத்தின் மையத்திலுள்ள சின்ன மாவட்டத்தில் கிராம புறங்களில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் கூட்டு கொள்ளை நடக்கிறதாம். இதில் ஒவ்வொரு கடையிலும் சூப்பர்வைசர், 2 சேல்ஸ் மேன்களோடு சேர்ந்து கொண்டு கிராமப்புற கடைகளில் கணக்கு முடிக்கிறோம் என கூறிக்கொண்டு இரவு நேரத்தில் கூடுதலாக ஒருமணி நேரம் திறந்து வைத்துள்ளனர். இதில், பகலில் பல்க்காக பதுக்கி வைக்கப்பட்ட பாட்டிலுக்கு கூடுதலாக ₹30க்கு விற்று கூட்டுக்கொள்ளை அடிக்கிறார்களாம். இவர்களுக்குள் பங்கு பிரிப்பதில் எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக 3 பேருக்கும் தலா 10 ரூபாய் என பாட்டிலுக்கு ₹30 கூடுதலாக விலை வைத்து விற்று வருகின்றார்களாம். இந்த கூட்டு கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கும் வீடு தேடி மாமூல் செல்வதால் அவர்கள் கண்டுகொள்வதில்லையாம். இதுகுறித்து மாவட்ட உயரதிகாரிக்கு புகாருக்கு மேல் புகார் சென்றதாம்.. மாவட்ட உயரதிகாரி தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அருகில் உள்ள சிமென்ட் மாவட்டத்தில் 14 பணியாளர்களை கண்துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்து சமீபத்தில் உத்தரவிட்டாராம். இன்று லஞ்சம் வாங்காதே...என்று புகார் வருது... நாளை முதல் வாங்கு அதுல எனக்கும் பங்கு கொடு என்று உயரதிகாரி சொல்வதை போல இருக்கு என்று பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கத்தரிக்காய் முத்தினா கடைக் தெருவுக்கு வந்துதானே ஆகணும்... இதை பற்றி சொன்னதும் யாரு ஞாபகம் வருது...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் ஆறு பக்கத்துல இருக்குற டஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்ல ஏட்டு ஒருத்தர் வேலை செஞ்சிட்டு வர்றாரு. இவரு, கடந்த சில நாளுக்கு முன்னாடி அந்த ஏரியா லிமிட்ல வாகன தணிக்கையில ஈடுபட்டிருக்காரு. அப்போ, அந்த பக்கமா மணல் கடத்திக்கிட்டு ஒரு லாரி போயிருக்குது. அந்த லாரியை மடக்கி பிடிச்சிருக்காரு. லாரி போலீஸ்ல சிக்குன மேட்டரை, உரிமையாளர்கிட்ட சொல்லியிருக்காரு. உடனே, வாகனத் தணிக்கையில ஈடுபட்ட போலீஸ் ஏட்டு செல்போனு அலறியிருக்குது. அதுல பேசிய லாரி உரிமையாளரு, நம்மளோடது 4 லாரி ஓடுது சார், அதோடு என்னோட மேனேஜர்தும் லாரி ஓடுது. எல்லாத்துக்கும் சேர்த்து பெயரோட முடிவுல துரைனு முடியுற 3 ஸ்டார் காக்கிகிட்ட, மாமூல் 2 தவுசன் கொடுத்துடுறேன். 3 ஸ்டார் காக்கியோட டிரைவர் மூலமாக மாமூல் கொடுத்துடுறேன். அதோட ஸ்டேஷனுக்கு தனியாக கொடுக்குறேன். கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்னு சொல்லியிருக்காரு. இதனால விரக்தி அடைஞ்ச ஏட்டு, நாங்க வேலை செய்றதா, இல்ல வேலைய விட்டு போயிடுறதான்னு தெரியலைன்னு புலம்பியிருக்காரு. இது குறித்த ஆடியோவும் வெளியாகியிருக்கு. இதைதான் இருட்டில் லஞ்சம் வாங்கினாலும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்தே தீருணும்னு சொல்லுவாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்