SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழலை மறைக்க இலை கட்சியை சேர்ந்த செல்லமானவர் அதிகாரிகளை சரிகட்டும் பணியில் இறங்கி இருப்பதை சொல்கிறார் wiki யானந்தா

2021-10-10@ 00:04:28

‘‘தொண்டாமுத்தூரா கொக்கா...’’ இதுக்கு சரியான விடை சொல்லுங்க பார்ப்போம்...’’ என்று முதல் கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை தொண்டாமுத்தூர் காக்கி அலுவலக காக்கிகள், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அனைத்து மளிகைக்கடைகளிலும் மாதம்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரைனு கல்லா கட்டறாங்களாம். இதற்கு உபகாரமா, கஞ்சா, குட்கா விற்க பச்சைக்கொடி காட்டி இருக்காங்களாம். கோவை மாவட்ட காக்கி உயரதிகாரி, கஞ்சா, குட்கா ஒழித்தே தீருவேன்னு கங்கணம் கட்டி திரியறாரு. ஆனால், தொண்டாமுத்தூர் காக்கிகள் அவரை கண்டுகொள்ளவில்லையாம். அன்றாடம் பாக்கெட்டுகளில் கரன்சி நிரப்பி, பழக்கப்பட்டுவிட்ட இவர்கள், மாவட்ட காக்கி அதிகாரியின் உத்தரவை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லையாம். இவர்களில் நடிகர் பெயர் கொண்ட ஒரு காக்கி, பின்னணி பாடகர் பெயர் கொண்ட ஒரு காக்கி என இருவரும் ஐயாவுக்கு கொடுக்கணும். மேலிடத்துக்கு அனுப்பணும்னு சொல்லியே ஒரு கடை விடாமல் ஏறி, இறங்கி கரன்சிகளை அள்ளிவிடுகின்றனர்... இதுதான் தொண்டாமுத்தூர் கேள்விக்கு அங்குள்ள நேர்மையான காக்கிகள் சொன்ன விடை...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிங்கிள் ஆளாக சிறுத்தைபோல வந்து சில்லறை வாங்குவது யாரு... 2வது கேள்வியை போட்டாரு...’’ பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்டத்தின் அணைப்பகுதியை ஒட்டியிருக்கும் கொளத்தூர் காக்கி ஆபீசில், மாவட்ட காக்கி உயரதிகாரியின் தனிப்பிரிவில் பணியாற்றி வரும் ஏட்டு, பழைய மணல் திருட்டு, சந்து கடை விற்பனையாளர்களிடமெல்லாம், எல்லாத்தையும் நான் பாத்துகிறேன். நீங்க வியாபாரத்தை நடத்துங்கனு சொல்லி கல்லா கட்டிக்கிட்டு இருக்காராம். இவரு ஏற்கனவே ஒரு அதிகாரிக்கு டிரைவராக இருந்தாராம். இதனால,  எந்தெந்த கிராமத்தில் உள்ளூர் மதுபானமும், கர்நாடக சரக்கும் கிடைக்கும்னு தெரியுமாம். இப்ப அந்த குற்றவாளிகளையெல்லாம் உசுப்பி விட்டு, கர்நாடக மதுபானங்களை கடத்தி வந்து விற்க சொல்கிறாராம். அதுக்கான கமிஷனை வாங்கிக் கொள்கிறாராம். இதுல ஸ்டேஷனின் முக்கிய அதிகாரிக்கும் பங்கு கொடுத்து, நல்ல விதமாக கவனிச்சுக்கிறாராம். இதனால, அந்த ஸ்டேஷன்ல வேலை பார்க்குற எல்லோரும் கரன்சி மழையில் நனைஞ்சுகிட்டு இருக்காங்களாம்... காக்கி அலுவலகத்தில் கேட்டால், அத்துனை பேரும் போனா கலெக்‌ஷன் குறையும்... சிறுத்தையை சிங்களா அனுப்பினா கரன்சி கொட்டுது... அதனால தான் நாங்க அவரை அனுப்புறோம். அவரும் துரோகம் செய்யாம, கரெக்டா கலெக்‌ஷனை கொடுத்துடறாரு...இது தான் உம்ம 2வது கேள்விக்கான விடை...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யாரு எதுக்காக பணம் வாங்க நடையாக நடக்கிறாங்க... யாரு கொடுக்காம இருக்கிறாங்க...’’ என்று 3வது கேள்வியை போட்டார் பீட்டர் மாமா.

‘‘குயின்பேட்டை மாவட்டத்துல, சட்டமன்ற தேர்தல் பணிக்காக, பிரைவேட் டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலமாக எலக்‌ஷன் டிபார்ட்மென்ட் மூலமாக கார்கள வாடகைக்கு எடுத்திருந்தாங்களாம். இதுல ஆற்காடு, வாலாஜா தாலுகாவுக்கு 8 வாடகை வாகனங்கள் எடுத்து, எலக்‌ஷன் டீம்க்கு கொடுத்திருக்காங்க. அதுக்கு அப்புறமா, கவர்மென்ட் அதிகாரிங்க எலக்‌ஷன் ரவுண்ட்ஸ் போறதுக்கும் இந்த வாகனங்களையே பயன்படுத்தியிருக்காங்க. சட்டமன்ற தேர்தல் முடிஞ்சி 4 மாசத்துக்கு மேல ஆகுது. ஆனாலும், டிராவல்ஸ் உரிமையாளருக்கு வாடகை பணத்தை கொடுக்கவே இல்லையாம். இதனால, ஒவ்வொரு வாரமும், கலெக்டர் ஆபீசுல, வெச்சிருக்குற பெட்டியில, வாடகை பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை மனுவ போட்டுட்டு வர்றாங்களாம், டிராவல்ஸ் உரிமையாளருங்க. ஆனாலும், எலக்‌ஷன் டிபார்ட்மெண்ட் எந்த ஆக்‌ஷனும் எடுக்கலையாம். இதனால, நிலுவை வாடகை தொகையை எப்படியாவது வாங்கிடணும்னு குயின்பேட்டை கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் நடந்தும் பணம் கிடைக்கலயேன்னு புலம்பி வர்றாங்களாம் டிராவல்ஸ் உரிமையாளர்ஸ்...’’ இதுதான் பாதிக்கப்பட்டவர்கள் உங்களின் 4வது கேள்விக்கு பதில் என்றார் விக்கியானந்தா.

‘‘கேள்விகள்போதும்...’’ என்று விக்கியை அரசியலுக்கு இழுத்தார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா  நகர ‘‘முருகன் அறுபடை’’ தலத்தின் மக்கள் பிரதிநிதியான இலைக்கட்சியின் ‘செல்லமானவர்’ கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்கு தொகுதி மக்கள்  பிரதிநிதியாக இருந்தார். அத்தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும்  செய்யாததால், வெற்றி பெற முடியாததை அறிந்து, கடந்த தேர்தலில் தொகுதி மாறினார்; வெற்றியும் பெற்றார். அறுபடை தலத்து யூனியனில் கடந்த ஆட்சியின்போது  நடந்த, ‘‘ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்’’ ஒதுக்கீடு செய்த நிதியை  இலைக்கட்சியினர் பங்கு பிரித்து முடித்து விட்டாங்க. தற்போது ஆட்சி  மாற்றத்திற்கு பிறகு குன்றத்து தொகுதிக்குள் வந்துள்ள ‘செல்லமானவர்’,  அந்த ‘‘ஊரக’’ வேலைத்திட்ட பணிகளுக்கு பூஜை போட்டு புதிதாக தொடங்குவது  போல பாவ்லா காட்டினாராம். இதுகுறித்து கொந்தளித்த பொதுமக்கள் எதிர்ப்பும் தெரிவித்து... ஏழை தொழிலாளிகளின் வயிற்றில் அடித்து அரசியல் செய்யாதீங்க என்று எதிர்ப்பு தெரிவித்தார்களாம். அப்புறம்,  மாவட்ட  நிர்வாகத்திடமும் புகார் சொன்னாங்களாம். இதை தொடர்ந்து உடனடியாக  அதிகாரிகளை சரிகட்டும் வேலையில் ‘செல்லமானவர்’, தனது ஆதரவாளர்களுடன்  களமிறங்கி உள்ளாராம். கடந்த ஆட்சியில் அந்த பணி நடக்கவே இல்லை என்பதுதான், இதில் ஹைலைட்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்