SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டை மாவட்ட மாஜி அமைச்சர் முடங்கிப்போன கதையை சொல்கிறார் : wiki யானந்தா

2021-10-09@ 01:02:20

‘‘எலக்‌ஷனை காட்டி கலெக்‌ஷன் செய்த தம்பதி பற்றி சொல்லுங்க பார்ப்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ வெயிலூர் மாவட்டத்துல வட்டம் என்ற பெயர்ல முடியிற கவர்மென்ட் ஸ்கூல்ல ஒரு லேடி டீச்சர் வேலை செய்றாங்க. இவங்க வீட்டுக்காரு 2 ஸ்டார் காக்கியாக இருந்து, ரிட்டையர்ட் ஆகிட்டாரு. இலை பேமிலியைச் சேர்ந்த இவங்க, அதே ஸ்கூல்ல வேலை ெசய்ற காட்டுப்பாடி டீச்சர் கிட்ட முக்கிய அரசியல்வாதிக்கு எலக்‌ஷனுக்காக பணம் தேவை படுது, பணம் கொடுத்தீங்கன்னா, அதிக வட்டியோட திரும்ப கொடுக்குறேன்னு ஆசைவார்த்தை காட்டினாங்களாம். காட்டுப்பாடி டீச்சருக்கும், இலை பேமிலி டீச்சருக்கும் 20 வருஷத்து நட்பாம். இதனால, காட்டுப்பாடி டீச்சரு தன்னோட சொத்து விற்ற பணம் ரூ.1.84 கோடிய கொடுத்தாங்களாம். பணத்தை கேட்டால், எங்க வூட்டுக்காரரு போலீசுல ஆபீசரா இருந்து ரிட்டயர்டு ஆனவரு. அதனால, நீங்க போலீசுல சொல்லி ஒண்ணும் செய்ய முடியாதுன்னு மிரட்டுறாங்களாம். இப்படியே இலை பேமிலியைச் சேர்ந்த தம்பதி எலக்‌ஷன் டைம்ல, நல்லா கலெக்‌ஷன் செஞ்சி, ஏராளமான சொத்துகளை வாங்கி குவிச்சிருக்காங்களாம். பணத்த கொடுத்தவங்க ஒன்றாக சேர்ந்து புகார் கொடுக்க முடிவு செய்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘தண்ணீயில தண்ணீயே கலக்காம லட்சங்களை சேர்க்கும் நபர்கள் கில்லாடிதான் போங்க... யார் அவங்க...’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘கோவை மாவட்டத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், நிர்வாக வசதிக்காக தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என இரண்டாக பிரிச்சாங்க. இரு மாவட்டத்துக்கும் தனித்தனி மாவட்ட மேலாளர்கள் இருக்காங்க. இதில், தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் வசூல்ல ரொம்பவே உச்சத்தில் இருக்காம். விற்கிறது மது... அதிலேயே அங்குள்ள ஊழியர்கள் சரக்கு விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி, கரன்சி குவிக்கிறார்கள். இந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை சம்பளம் தான். ஆனால், இவர்கள் எக்ஸ்ட்ரா வசூலாக மாசத்துக்கு ரூ.1 லட்சம் எடுத்து விடுகின்றனர். சேல்ஸ்மேன்கள் ஒரு பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை உயர்த்தி, பாக்கெட்டை நிரப்பி விடுகின்றனர். மது குடித்தவர்களை, என்ன தண்ணீ அடித்து இருக்கிறியானு கேட்கிறாங்க... அந்த தண்ணீயில தண்ணீயே கலக்காம லட்சங்களை குவிப்பவர்களை லஞ்ச ஒழிப்பு துறை கண் வைத்துள்ளதாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ இலை ஆட்சியில், கால்நடை துறையில் நேர்காணல் நடத்தி லட்ச கணக்கில் சுருட்டிய அதிகாரிகள் ஏன் கலங்கி போய் இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் கடந்த இலை ஆட்சியில் கால்நடைதுறை பராமரிப்பு உதவியாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்பத்தினர் என 43 காலிபணியிடங்களுக்கு கால்நடைதுறை அலுவலகத்திலே நேர்காணல் நடத்தப்பட்டதாம். நேர்காணலில் ஆண்கள், பெண்கள் என 25ஆயிரம் பேர் பங்கேற்றனர். நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி இலைகட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர முக்கிய நிர்வாகிகள் பலரிடம் லட்சக்கணக்கில் வசூலித்தார்களாம். அரசு வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் பணம் கொடுத்தவர்கள் காத்திருந்தனர். ஆனால்... சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கால்நடை துறையில் பணி நியமனம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாம். பணம் கொடுத்தவர்கள், இலைகட்சி நிர்வாகிகள் வீட்டிற்கே சென்று கேட்டுள்ளனர். நீங்கள் கொடுத்த பணத்தை நேர்காணல் நடத்திய அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ளோம். நாங்கள் முழுசாக எடுக்கவில்லை. உங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிக்கை கூறி ஒவ்வொரு முறையும் அனுப்பி விடுகிறார்களாம். தற்போது ஆட்சி மாறியிருப்பதால், கடந்த ஆட்சியில் நடந்த நேர்காணலை ரத்து செய்து விட்டு கால்நடை துறையில் புதிதாக நேர்காணல் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களிடம் இருந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு பெட்டிசன் சென்றுள்ளதாம். இந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் தற்போது கசிய தொடங்கி இருப்பதால் நேர்காணல் நடத்திய அதிகாரிகள், இலைகட்சி முக்கிய நிர்வாகிகள் கிலியில் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முட்டையில இருந்து கோழி வந்ததா... கோழியில் இருந்து முட்டை வந்ததானு கேட்க மாட்டேன். வாயில் இருந்து வார்த்தைகளை கொட்டி வம்பில் சிக்கிய புள்ளி யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘முட்டை  மாவட்டத்தில் ஷாக்கடிக்கும் துறைக்கு மாஜி மினிஸ்டராக இருந்த  கோல்டுபெல்லுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் சீனியர்  ஒருவருக்கும் பல ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம். இது நடந்து முடிந்த  அசம்பிளி எலக்‌ஷனிலும் எதிரொலித்தது. சீனியருக்கு சீட்டு கொடுக்காமல்  நைசாக கழற்றி விட்டார் மாஜி. இதனால் நொந்துபோன அவர், சமீபத்தில்  தாய்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதோடு ஊரக உள்ளாட்சி தேர்தலில்  தீவிர பிரசாரமும் செய்து வருகிறார். இதனால் கடுப்பான மாஜி, தான் போகும்  இடங்களில் எல்லாம் சீனியரை பற்றி, பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவிழ்த்து  விட்டார். இதனால் ஆவேசமான சீனியர், மாஜியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆடியோ  ஆதாரம் வெளியிட்டு, அனைத்தும் பொய் என்று பப்ளிக்கிடம் அம்பலப்படுத்தி  வருகிறார். அதோடு மாஜியின் தகிடுதத்தங்கள், லீலைகள் எல்லாம் எனக்கு  தெரியும். அதனை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் என்றும்  அறிவித்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன மாஜி, ஏண்டா வாயை குடுத்து  வம்பில் மாட்டிக்கிட்டோம் என்று நொந்து போய் இருக்கிறாராம். அதனால எங்கே பிரசாரத்துக்கு போனாலும் தன் சீனியரை சீண்டுவதை விட்டு முடங்கி கிடக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்