தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
2021-10-09@ 01:00:26

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது: வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 8வது முறையாக எவ்வித மாற்றமுமின்றி 4 சதவீதமாக தொடரும். இதுபோல் ரிசர்வ் ரெப்போ வட்டி 3.35 சதவீதமாக தொடரும். வரும் 2022ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் உள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை.
நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 9.5 சதவீதமாக இருக்கும். ஐஎம்பிஎஸ் முறையில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது. இது 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதுபோல், இணையதள வசதியின்றி, மொபைல்கள் மற்றும் வங்கி டெபிட் கார்டுகள் மூலம் பணம் அனுப்பும் முறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பரிசோதனை ரீதியாக செயல்படுத்தப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு ரூ.200 என்ற அளவில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, இதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.
மேலும் செய்திகள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.38,536-க்கு விற்பனை
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!
ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது
தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்... வாங்க முடியாத உச்சத்தில் விலை : ஒரு சவரன் ரூ.248 உயர்ந்து ரூ.38,288 விற்பனை!!
இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.73ஆக சரிவு!!
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி இழப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்