விமானப்படை பெண் அலுவலர் பலாத்காரம் கைதான அதிகாரியை 7 நாள் காவலில் விசாரிக்க மனு: கோவை மகளிர் போலீசார் தாக்கல்
2021-10-08@ 00:17:58

கோவை: கோவையில் விமானப்படை பெண் அதிகாரி பலாத்கார வழக்கில் கைதான அதிகாரியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மகளிர் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். கோவை ரெட்பீல்டில் விமானப்படை கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சிக்கு வந்த 28 வயது பெண் அதிகாரியை பலாத்காரம் செய்ததாக சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி அமித்தேஸ் (30) கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை விமானப்படையினரே விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் தலையிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கைதான அதிகாரி அமித்தேஸ் விமானப்படை பிரிவின் காவலில் உள்ளார். இந்நிலையில் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார், கைதான அதிகாரியை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என கோவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், நாங்கள்தான் இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறோம். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்காமல் நாங்களே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Tags:
Female Air Force Officer Rape Arrest Officer 7 Day Detention Petition for Investigation Coimbatore Women Police Filed விமானப்படை பெண் அலுவலர் பலாத்காரம் கைதான அதிகாரி 7 நாள் காவலில் விசாரிக்க மனு கோவை மகளிர் போலீசார் தாக்கல்மேலும் செய்திகள்
மதுராந்தகம் அருகே மோச்சேரியில் திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா
அடுக்குமாடி குடியிருப்பில் தீ; வயதான தம்பதி உயிர் தப்பினர்; திருவான்மியூரில் பரபரப்பு
வேங்கூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 19 பேர் காயம்
பறக்கையில் ₹12 லட்சத்தில் நெல்கொள்முதல் நிலையம்-விவசாயிகள் மகிழ்ச்சி
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா-கொடியேற்றத்துடன் தொடக்கம்
முக்கொம்பு வந்த காவிரி நீரை மலர், நெல், தானியங்கள் தூவி வணங்கி வரவேற்ற விவசாயிகள்
தேர்..டெடிபேர்..தாஜ்மஹால்..!!: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது..!!
திருவள்ளுவர்.. ஸ்பைடர் மேன்.. மயில்..!!: கொடைக்கானலில் மனதை கவரும் மலர் கண்காட்சி.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!