SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது யாருக்கான அரசு?

2021-10-08@ 00:16:40

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 2020, செப்டம்பர் மாதம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் என 3 வேளாண் திருத்த சட்ட மசோதா நிறைவேறியது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.27ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி துவக்கத்தில் இருந்தே பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு நவ.27ம் தேதி தலைநகர் டெல்லியில் போராட்டத்தை ஆரம்பித்த விவசாயிகள், 10 மாதங்களுக்கும் மேலாக கடும் வெயில், பனி, மழையிலும் தொடர்ந்து வருகின்றனர். ‘‘மசோதாவை வாபஸ் பெற மாட்டோம்’’ என்ற பிடிவாதத்துடனே, ஒன்றிய அரசு விவசாயிகள் சங்கத்துடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. வாபஸ் பெற்றால்தான் போராட்டத்தை கைவிடுவோமென விவசாயிகளும் கொரோனா சூழலிலும் விடாப்பிடியாக களத்தில் உள்ளனர்.
இந்த சூழலில்தான் உபி எம்பியும், மத்திய உள்துறை இணையமைச்சருமான அஜய் குமார் மிஸ்ரா, ‘‘டெல்லி போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இல்லாவிட்டால் 2 நிமிடங்களில் நான் முடிவுக்கு கொண்டு வருவேன்’’ என கொடுத்த மிரட்டல் பேட்டி, உபி மாநில விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து கடந்த 3ம் தேதி உபி மாநிலம், லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது, பாஜவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியாயினர். பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா கைது, ராகுல் காந்தி தர்ணா, விவசாயிகள் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் என உபி மாநிலம் தொடர்ந்து பதற்ற நிலையிலே உள்ளது.

வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மையே என ஒன்றிய அரசு கூறுகிறது. ‘‘இந்த சட்ட திருத்தத்தால் கார்ப்பரேட்களே பலன் பெறுவார்கள். எங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. எங்கள் வாழ்வாதாரமே அழிந்து விடும்’’ என்கின்றனர் விவசாயிகள். ஒரு அரசானது மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமே தவிர, தங்களது விருப்பத்தை, மக்களை ஏற்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. சுமார் ஓராண்டாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தை, ‘‘நியாயமான வழியில்’’ முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு முயல வேண்டும். மாறாக, அப்பாவி விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றி, வன்முறையை தீர்வாக்கி முடிவுக்கு கொண்டு வர ஒருபோதும் முயலக்கூடாது. தமிழகம் உட்பட பல மாநில அரசுகளும் எதிர்க்கும் வேளாண் திருத்த சட்டங்களை, ஒன்றிய அரசு விரைவில் திரும்ப பெற வேண்டுமென்பதே மக்கள், விவசாயிகளின் விருப்பமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்