SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பரிதாப சாவு; பலர் படுகாயம்

2021-10-07@ 17:45:48

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது. இதில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கில் 14 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிபி, பிஷின், முஸ்லிம் பாக், கிலா சைபுல்லா கச்ச்லக், ஹர்னாய் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியது. பல வீடுகளின் சுவர்களும், மேற்கூரையும் இடிந்து விழுந்தது. அதிகாலை என்பதால் வீடுகளில் இருந்த ஆழ்ந்த தூக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் எழுந்து வெளியே ஓடி வந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகையில், ஹர்னாய், ஷாஹ்ராக்கில், பலூசிஸ்தானின் சில பகுதிகளில் வீடுகள் மற்றும் தனியார், பொது கட்டிடங்கள் சேதமடைந்தன. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்’ என தெரிவிக்கிறது. இதற்கிடையில், ஹர்னாயில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பலரை மீட்பு குழுவினர், ஹர்னாயில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.

ஜப்பானிலும் நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவாத் மாகாணத்தில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சில வினாடிகளுக்கு நீடித்தது. அதிகாலை என்பதால் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்த அவர்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் இந்த நிலநடுக்கத்தில் வீடுகளில் டிவி உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்ததில் 80 வயது மூதாட்டி உள்பட 3 பெண்கள் படுகாயமடைந்தனர். அதே வேளையில் இந்த நிலநடுக்கமானது சக்தி வாய்ந்ததாக பதிவானபோதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ncc-modi-medal-28

  டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

 • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

  ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

 • flag-drones-display-27

  காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்