SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசில் பணம் பார்க்கும் பெண் அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-06@ 01:28:06

‘‘சி ல சமயங்களில் தேவையற்ற ரிஸ்க் கூட, சிக்கலில் முடியும் போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும், 9ம் தேதியும் நடக்கிறது. இதனால, டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள் ‘லீவ்’ விட்டாச்சு. வழக்கம்போல குடிமகன்கள் தங்களை தேடி வருவார்கள் என்று கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பவர்களும், கள்ளச்சாராய வியாபாரிகளும், நமக்கு தீபாவளி போனஸ் முன்னதாகவே வந்துடுச்சு என்று உற்சாகத்தில் துள்ளினர். காரணம், பல லட்சங்களை கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருக்கிறார்களாம். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கடுமை காட்டுவதால் போட்ட முதலை எடுக்க முடியுமா... கடனை அடைக்க முடியுமா... நகைகளை மீட்க முடியுமா என்று கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்களாம். இருந்தாலும், சில இடங்களில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மதுவிற்பனை கனஜோராக நடக்குதாம். ஒரு குவாட்டர் பாட்டில் 300க்கு விற்கிறார்களாம். மற்றொரு பக்கம் சிலர், எதுக்கு திருட்டுத்தனமாக மதுவை வாங்கி குடிக்க வேண்டும் என்று நினைத்து அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகா மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று குடித்துவிட்டு வர்றாங்களாம். கள்ள கஸ்டமர்கள் ரூட் மாறுவதால் மது விற்க முடியாமல் தேங்கி கிடக்கிறதாம். கடை வைக்க ரிஸ்க் எடுத்து கடன் வாங்கினால் பரவாயில்லை. ஆனால், சட்டத்துக்கு புறம்பாக கடன் வாங்கினால் சிக்கலில்தான் முடியும் என்கின்றனர் சரக்கை பதுக்கி வைத்து விற்க முடியாமல் தவிப்பவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கையில் இருந்தால் காசு.. வெடித்தால் கரும்புகை.. நம்ம பணம் கருகியதாக நினைக்கிறோம். ஆனால், அதுதான் பலருக்கு ஒருவேளை சாப்பாடு போடுகிறது...’’ என்று வேதனைப்பட்டார் பீட்டர் மாமா.
‘மேட்டரை சுற்றி வளைத்து சொல்லாதே... சிவகாசியில் நடப்பதை பாதிக்கப்பட்டவர்கள் பேசிக்கொள்வதை சொல்கிறேன் கேளு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘விருதுநகர் மாவட்டத்தின் ‘கந்தக பூமியில்’ பட்டாசு தொழில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தது. இப்படிப்பட்ட சூழலிலும் இங்குள்ள ‘பெண் சிறப்பு அதிகாரி’, டூவீலரில் சென்று படு பயங்கரமாக கலெக்ஷன் நடத்தி வருகிறாராம். ஆய்வு என்ற பெயரில் ஒரு பட்டாசு ஆலைக்கு ரூ.20 ஆயிரம் துவங்கி ரூ.50 ஆயிரம் என வசூல் செய்து விடுகிறாராம். பட்டாசு விற்றாலும் விற்கா விட்டாலும் எனக்கு கவலையில்லை... யார் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் எனக்கு அக்கறையில்லைனு பணம் கொடுப்பவர்களிடம் கறாராக சொல்கிறாராம். தற்போது, தீபாவளி நெருங்குவதால் பட்டாசு தொழில், ராக்கெட் வேகத்தில் நடந்து வரும் இடங்களை நோட்டமிட்டு, ‘விசிட்’ அடித்து, கடந்த ஒரே வாரத்திற்குள் ரூ.10 லட்சம் வரையிலும் வசூல் அள்ளியது, சக துறையினரிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வழக்கமான தீபாவளி கலெக்ஷன் என்றாலும், இந்த பெண் அதிகாரியின் வலுக்கட்டாய கலெக்ஷன் கண்டு, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆடிப் போய் உள்ளனர். இந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன், தொழிலாளர்கள் மத்தியிலும் பெருத்த குரல் ஓங்கி ஒலிக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாகர்கோவில்ல இரு துறைகளுக்கு இடையில் நடக்கும் மோதலை சொல்லுங்க பார்ப்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘‘நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நில உரிமைதாரர் வரைபடம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இன்னமும் கணினிமயமாக வில்ைல. இதனால். சொத்துகளை சப் டிவிஷன் செய்ய விண்ணப்பித்தால் ரொம்பவே தாமதம் ஆகுதாம். ஏனெனில் மாநகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட விஏஓ அலுவலகங்கள் இருந்த போதிலும் ‘‘எப்எம்பி’’ எனப்படும் ‘‘பீல்டு மெஷர்மென்ட் புக்’’ மாநகராட்சி வசம் மட்டுமே உள்ளதாம். இதனை நகலெடுத்து சம்பந்தப்பட்ட விஏஓ அலுவலகங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டால் கடந்த பல ஆண்டுகளாக வழங்காமல் அலைக்கழித்து வருகிறார்கள் என்று வருவாய் துறையினர் கூறுகின்றனர். இவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டால் எளிதாக கிடைத்து விடும். அதுவும் நடந்தேறவில்லை. இதனால் சப் டிவிஷன் போன்ற வருவாய்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சர்வே பிரிவு அதிகாரிகளின் நடவடிக்கைகள் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது, இதனால் வருவாய் துறைக்கும் மாநகராட்சிக்கும் இடையில் நடக்கும் சண்டையால் அலைக்கழிக்கப்படுவது என்னவோ, சாதாரண மக்கள்தான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்