SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இல்லாத நிறுவனத்துக்கு ஆறு கோடிக்கு ஆவின் பால் சப்ளை செய்ய சொன்ன மாஜி அமைச்சரின் லீலைகளை சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-04@ 00:48:56

‘‘இல்லாத நிறுவனத்துக்கு 6 கோடிக்கு பால் அனுப்பிய ஆவின் நிறுவனத்தின் ஊழலால் நிர்வாகம் அதிர்ந்து போயிருக்காமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை ஆட்சியில் மதுரை ஆவினில் இருந்து தினமும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சத்துக்கு பால் சப்ளை செய்யப்பட்டதாம். 10 மாதங்கள் சப்ளை செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உடனே பால் சப்ளை நிறுத்தப்பட்டு, அதுவரை பால் சப்ளைக்கான தொகை ரூ. 6 கோடியை வாங்க முடிவு செய்தாங்களாம். ஆனால் அந்த நிறுவனம் பாலுக்கான தொகையை இதுவரை மதுரை ஆவினுக்கு செலுத்தவில்லையாம். ஆட்சி மாற்றத்திற்குப்பின் மதுரை ஆவினில் நடந்த தணிக்கையில் இந்த ரூ. 6 கோடி இடித்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று, ஆவினுக்கு செலுத்த வேண்டிய பணத்தை வாங்கி வரும்படி தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரும் முகவரியை எடுத்துக்கொண்டு கோவைக்கு சென்றார். கோவையில் சந்து, பொந்தெல்லாம் தேடி, கடைசியில் இடுக்கு சந்தில் ஒரு வீட்டில் உள்ள அறைதான் அந்த முகவரி என கண்டுபிடித்தார். அந்த அறை ஏற்கனவே பல மாதமாக பூட்டப்பட்டிருப்பதாக குடியிருக்கும் வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். வெறுத்துப் போன விசாரணை அதிகாரி, மதுரை ஆவின் அதிகாரியிடம் அந்த முகவரியில் அப்படி ஆட்கள் யாரும் இல்லை என தகவல் கூற, இந்த நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்ய பரிந்துரை செய்தவர் கோவையில் உள்ள ஆவின் மேலாளர் என தகவல் கொடுத்துள்ளனர். உடனே விசாரணை அதிகாரி கோவை ஆவினில் சம்பந்தப்பட்ட மேலாளரை விசாரித்துள்ளார். துறை அமைச்சர் கூறியதால், நான் சிபாரிசு செய்தேன். எனக்கு, பால் சப்ளை பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டாராம். இந்த தகவல் ஆவின் நிர்வாக மேலாளர் வரை செல்ல, கோவை மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்... அடுத்ததாக மாஜி அமைச்சர் சிக்குவார் என்று ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயிலூர்ல உள்ளாட்சி தேர்தலில் இலை கட்சிக்காரங்க யாரும் ஏன் ஆர்வம் காட்டல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக தேனிகாரர் கடந்த வாரம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது ஒருங்கிணைப்பாளர் வருகை குறித்து தகவல் எதுவும் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வரவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கும் வரவில்லை என்றால் எப்படி என்று ேதனிக்காரரின் ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கினர். இந்த புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேனிகாரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆனாலும், அவருக்கு போதிய வரவேற்பு இல்லையாம். மேலும் இலைக்கட்சியினர் மத்தியில் புலம்பல் தீர்ந்தபாடில்லை. காரணம் தேனியும், சேலமும் சேர்ந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாமல் ஈகோவில் இருப்பதால் இலைக்கட்சி வேட்பாளர்களின் வெற்றி கேள்விக்குறியாகிவிட்டதாக வேட்பாளர்களும், கட்சியினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை போலவே ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்துவிடுவோம் என்று இலை தரப்பினர் தூக்கமின்றி தவிக்கின்றனர். தேர்தலில் வேலை செய்தாலும் ‘ப’ விட்டமின் கிடைக்காது என்பதால் தொண்டர்கள் உற்சாகமின்றி இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலையின் இரட்டை தலைமை மீது தாமரை தலைமை கடும் அதிருப்தியில இருக்காமே, என்ன காரணம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் துவங்கியதில் இருந்தே இலை கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வெடித்து. ஒருவழியாக தாமரையை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு கணிசமான இடங்களை இலை ஒதுக்கியது. இலை கட்சி வலுவாக இருக்கும் இடங்களை தாமரைக்கு ஒதுக்கியதால், இலை நிர்வாகிகள் மட்டத்தில் கொதித்து எழுந்தனர். இதனால் ஒரு சில இடங்களில் இலை கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். ஒரு சிலரை சமாதானம் படுத்தினாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களிலும் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களான மாஜி அமைச்சர்கள் இரண்டு பேர், இலை கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வீதி வீதியாக பிரசாரம் செய்து வர்றாங்க. அண்மையில் இலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேனிகாரர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சேலம்காரர் வந்தபோதும் கூட்டணியில் உள்ள தாமரை கட்சி வேட்பாளர்களை முக்கியத்துவம் கொடுத்து மேடை உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பெயரவில் சீட் கொடுத்து கழற்றி விட்டதால் தாமரை கட்சியின் வேட்பாளர்கள், தலைமைக்கு சரமாரியாக புகார் அனுப்பி வருகின்றனர். இதனால் தேனி, சேலம் விவிஐபிக்கள் மீது தாமர தலைமை கடும் அதிருப்பதியில் உள்ளதாக அக்கட்சியினர் சொல்லி வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்