SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறிச்சோறு போட காசு கேட்கும் ஒன்றிய செயலாளரை பார்த்து பயந்து ஓடும் இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-03@ 01:42:35

‘‘ரவுடிக்கு உளவுசொல்லும் காக்கியால் பரபரப்பு ஏற்பட்டிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகம் முழுவதும் கோம்பிங் ஆபரேஷன் மூலம் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலும் 200க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பாடின்னு முடியற ஊர்ல, ‘‘பிரு’’னு ஆரம்பிக்கிற பெயரை கொண்ட ரவுடி, சென்னையில் ஒரு மருத்துவமனையில், கை முறிந்து விட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவ சான்றிதழை காவல் நிலையத்தில் சமர்ப்பித்தாராம். இந்த மருத்துவச்சான்றிதழை வைத்து விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சியில் உறைந்தார்களாம். அந்த சான்றிதழில் குறிப்பிட்டிருந்த பெயரில் அந்த பகுதியில் அப்படி ஒரு மருத்துவமனையே இல்லையாம். அதனால ரவுடியை பிடிக்க வலைவரிச்ச போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து அந்த ரவுடி தப்பிக்க, இப்போது கோர்ட் மூலம் பிடிவாரன்ட் போடப்பட்டுள்ளதாம். இந்த ரவுடிக்கு இப்படி ஒரு ஐடியாவை கொடுத்ததே காக்கி சட்டை ஒண்ணுதானாம்... இப்போது ரவுடியை பிடித்தால் தான் ஐடியா கொடுத்த காக்கி சட்டையை பிடிக்க முடியும் என்பதால் ரவுடியை தேடுறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

 ‘‘இலையில் இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லையாமே, நிர்வாகிகளுக்கு தான் தட்டுப்பாடாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘மாங்கனி மாவட்டத்துல மாஜி விவிஐபி மாவட்ட செயலாளராக இருக்கும் பகுதியில, உள்ளாட்சி தேர்தல் நடக்குது. எம்எல்ஏ சீட்டை எப்படி பிடிச்சோமோ, அதே போல போட்டியிடும் அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றணும் என்று மாஜி உத்தரவு போட்டிருக்காராம். வாக்காளர்களை எப்படி கைக்குள் கொண்டு வரனும் என்று எங்களுக்கு தெரியும் தலைவரேன்னு சொன்ன ஒன்றிய செயலாளர் ஒருவர், நூதன வழிமுறையை அமல்படுத்தியிருக்காராம். தேர்தல் ரவுண்டுக்கு வரும் கட்சிக்காரர்களை குஷிப்படுத்த, தினமும் கறிச்சோறு போடுறாராம். ஆனா, சாப்பாட்டு நேரத்துல முக்கிய நிர்வாகிகள் எஸ்கேப் ஆகிடுறாங்களாம். என்ன, ஏது என்று விசாரித்தால், தினமும் கறிசோறு போடுறதுக்கு முப்பது ஆயிரம் செலவாகுதாம். கறிச் சாப்பாட்டுக்கான அனைத்து செலவையும் மாஜி விவிஐபி பெயரை சொல்லி, அவர்தான் பணத்தை கேட்டு வாங்கச் சொன்னார்னு, விருந்தாளியாக வந்து கறிச்சோறு சாப்பிட்ட நிர்வாகிகளின் தலையில் கட்டிடுறாராம் அந்த ஒன்றியம். இதனால ஓட்டு கேட்கும் நிர்வாகிகள், மதிய லஞ்ச் நேரத்துல மட்டும் ஓட்டம் பிடிச்சிடுறாங்களாம். ஆனால், சேலம் விவிஐபியிடம், அண்ணே கறிற்சோறு போட தினமும் 30 ஆயிரம் செலவாகுது... எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்... அது, என்னுடைய பணம் தான்னே என்று கூறி தனியாக பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறாராம். அவரும் தேர்தல் முடிந்த பிறகு வரவு செலவை பார்த்து கொடுத்துடலாம்... ஜெயிக்கணும் அதுதான் முக்கியம்னு சொல்லி அனுப்புறாராம்... கடை தேங்காய் எடுத்து பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறதே என்று இலை நிர்வாகிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

 ‘‘உப்பு தின்ன பொறியாளர்கள், தண்ணீர் கிடைக்காம தவிக்கிறாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாநகராட்சியில் தோண்ட தோண்ட பூதம் கிளம்புதாம். மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் தங்களுக்கு கடந்த ஆட்சியிலே 5 மாதம் சம்பளம் வரவில்லை என ஆதாரத்துடன் புகார் சொன்னாங்களாம். இதை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான ஆணையர், சம்பந்தப்பட்ட பொறியாளர்களை நேரில் அழைத்து விசாரிச்சாராம். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் சொன்னாங்களாம். மாநகராட்சியில் அதிகாலை மற்றும் மாலை இரண்டு நேரங்களில் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளும் 80 ஊழியர்களுக்கு கடந்த ஆட்சியில் மாதந்தோறும் ரூ.6ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதாம். அதிலும் வருங்கால வைப்பு நிதி என ரூ.1000 பிடித்தம் செய்தது போக மீதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதாம். ஆனால், ஒப்பந்தப்படி ஆபரேட்டர்களுக்கான மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாம். மாநகராட்சி பொறியாளர்கள் உதவியுடன் ஒப்பந்ததாரர்கள் ஆபரேட்டர்களை வஞ்சித்து மாதந்தோறும் ஒவ்வொருவரிடமும் ரூ.8ஆயிரம் சுருட்டி இருந்ததும்.. உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கும் மாதந்தோறும் கரன்சி சென்றதும்.. தற்போது ஆட்சி மாற்றத்தில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம். இதனால் கடந்த ஆட்சியில் மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பொறியில் சிக்கா எலிக்கு... பெரிய பொறி வைத்துள்ளார்களாேமே, சிக்குமா...’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவையில் மாஜி அமைச்சர் வீடு உள்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மெகா ரெய்டு நடத்தினர். ஆனால், இந்த பட்டியலில் வடவள்ளியை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் சிக்கவில்லை. இவர், இலை கட்சியில் உறுப்பினராக இல்லை. ஆனால், இலை கட்சியின் தீவிர அனுதாபி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வடவள்ளி பகுதியில் நான்கு கோடி ரூபாய்க்கு பங்களா கட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், கொடநாடு பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட மாஜி முதல்வரின் சொத்து ஆவணம் உள்பட பல்வேறு விஐபிக்களின் சொத்து ஆவணங்களை இவர்தான் பதுக்கி வைத்துள்ளார். இவர், வெளித்தொடர்புக்கு அதிகம் வராமல் இருப்பதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்த வலையில் சிக்கவில்லை. விஜிலென்ஸ் ரெய்டுக்கு பிறகு இந்த நபர், ரொம்பவே விழித்துக்கொண்டார். அடுத்து, எந்நேரமும் நம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பார்வை திரும்பும் எனக்கருதி, முக்கிய ஆவணங்களை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இவர், மிகவும் ‘‘நவீன’’மாக செயல்பட்டு வருவதால், விஜிலென்ஸ் பிடியில் இருந்து, நழுவி வருகிறார். ஆனாலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வலைவிரித்த வண்ணம் உள்ளனர். சிக்குவாரா... மாட்டாரா என்பதுதான் இப்ோதையை டாக்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்