காஞ்சி, செங்கை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
2021-10-02@ 06:38:46

காஞ்சிபுரம்: கலெக்டர்கள் காஞ்சிபுரம் ஆர்த்தி, செங்கல்பட்டு ராகுல்நாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய வட்டங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிமீ தூரத்துக்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், அயல்நாட்டு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும். அதன்படி, வரும் 4, 5, 6 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12ம் தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிமீ தூரத்துக்குள் வரும் 7, 8, 9 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளான, புனித தோமையார் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் வரும் 4ம் தேதி காலை 10 மணிமுதல் 6ம் தேதி நள்ளிரவு 12 மணிவரையும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்துக்கு பகுதிகளில் 7ம் தேதி காலை 10 மணிமுதல் 9ம் தேதி நள்ளிரவு 12 மணிவரையும், டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்படும். மேலும், 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளான்று, 5 கிமீ சுற்றளவுக்கு டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!