SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் காப்போம்

2021-10-01@ 00:09:39

கொரோனா 2வது அலை கோர தாண்ட வம் ஆடி வந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். கொரோனா பரவலுக்கேற்ற வகையில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது, ஆக்சிஜன் படுக்கைகளுடன் மருத்துவ வசதிகளை அதிகரித்தது, மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் பல லட்சம் பேருக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்த வைத்தது, 3வது அலை வந்தாலும் சமாளிக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதியை ஏற்படுத்தியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பாராட்டை பெற்று வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பாதிப்புடையோர், டயாலிசிஸ் தேவைப்படுவோர் அவதியடைந்தனர். இதை மனதில் கொண்டு அவர்களின் வீடு தேடி சென்று சிகிச்சை, மருந்துகள் அளிக்கும், ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ திட்டத்தை கடந்த ஆக. 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் துவக்கி வைத்தார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஒரு திட்டம் துவக்கப்படும். அதன்பிறகு அத்திட்டமே அஸ்தமனம் ஆகி விடும் என்ற நிலைதான் தமிழகத்தில் இருந்தது. ஆனால், ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ திட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.242 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பயனடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அடுத்தக்கட்டமாக, வரும் முன் காப்போம் திட்டத்தையும் வாழப்பாடியில் துவக்கி வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக, கடந்த 2006, டிச. 30ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞரால் இத்திட்டம் துவக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட இந்த மகத்தான திட்டத்துக்கு, மீண்டும் புத்துயிர் தந்துள்ளது திமுக அரசு. ஆண்டுக்கு சுமார் 1,250 முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்களில் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படும். அதில் பிரச்னைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், பொது மருத்துவம், இருதய  சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அறுவை சிகிச்சை, எலும்பு  முறிவு, மாற்றுத்திறனாளிகள் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், காசநோய், புற்றுநோய் மருத்துவம் உள்ளிட்ட  17 வகை சிகிச்சைகள் அளிக்கப்படும். பரிசோதனையில் நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை கொண்டவர்களுக்கு, ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ திட்டத்தில் மருத்துவ உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படை தேவைகளில் மருத்துவத்தையும் மிக முக்கியமானதாக கருதி, தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் அக்கறை காட்டும் தாயுள்ளம் கொண்டதாக திமுக அரசு விளங்குகிறது என பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றும் திமுக ஆட்சியின் கீழ், ஆரோக்கிய நடை போடட்டும் தமிழகம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்