பதிவுதுறை அலுவலகத்தில் விடிய, விடிய ரெய்டு கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியது: அதிகாரிகள், புரோக்கர்கள் கலக்கம்
2021-09-29@ 00:46:02

சேலம்: சேலம் சூரமங்கலம் பதிவுதுறை அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த விஜிலென்ஸ் சோதனையில், கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள், டைரிகள் சிக்கியது. சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு பணம் வசூலிப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜீக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 5.45மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்து, சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்குத்தான் முடிந்தது.
இந்த சோதனையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும், டைரிகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் சார்பதிவாளர் இந்துமதி, புரோக்கர்கள் உள்பட 6 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஐபிக்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த உதவியாளர் காவேரி பணியாற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்ததால் பதிவுத்துறை அதிகாரிகள், புரோக்கர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Tags:
Registry office Vidya Vidya raid money documents officers brokers riot பதிவுதுறை அலுவலக விடிய விடிய ரெய்டு பணம் ஆவணங்கள் அதிகாரிகள் புரோக்கர்கள் கலக்கம்மேலும் செய்திகள்
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் மாரியாற்றில் படர்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவாரூர் வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய தெப்ப குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்
வீட்டின் கதவை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கோயிலில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு; 4 பேர் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி..!!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!