SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜதந்திரம் தேவை

2021-09-28@ 00:15:46

குவாட் மற்றும் ஐ.நா மாநாடுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். சமீபகாலமாக, இந்தியாவுடன் அமெரிக்கா நல்ல நட்பில் இருந்து வருகிறது. இந்தியா மீது அமெரிக்காவின் திடீர் பாசத்துக்கு காரணம், சீனா என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளவேண்டும். உலக அரங்கில் சீனாவை எதிர்க்க இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் இணைந்து ‘‘குவாட்’’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் தனியாக நின்று தடுக்க முடியவில்லை. இந்தியாவின் உதவியுடன் சீனாவுக்கு செக் வைக்க முடியும் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. உலக நாடுகள் தனக்கு கீழ் இருக்க வேண்டும். பிற நாடுகள் வளர்ச்சியடைந்து, நவீன ஆயுதங்களில் தன்னிறைவு பெற்று விட்டால், தனது பேச்சு எடுபடாது என அமெரிக்கா எண்ணுகிறது. இதனாலேயே சீனாவுக்கு பல்வேறு வகையில் செக் வைக்க அமெரிக்கா பல உத்திகளை கடைபிடித்து வருகிறது. சீனாவை சீண்டும் வகையில், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பன் என்பதை அமெரிக்கா அடிக்கடி குறிப்பிட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தவும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘‘ஆக்கஸ்’’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவை எதிர் கொள்ள ‘‘குவாட்’’ அமைப்பு இருக்கும்போது, புதிய அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்க்க மறுப்பது ஏன்?

முக்கியமாக, இந்த அமைப்பில், இந்தியா இணைவதால் மற்ற நாடுகளுக்கு என்ன பாதிப்பு? சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இந்த அமைப்பில் இந்தியாவை இணைப்பதில் அமெரிக்காவுக்கு தயக்கம் ஏன்? ‘‘ஆக்கஸ்’’ அமைப்பால், ‘‘குவாட்’’ வருங்காலங்களில் பலவீனம் அடைய வாய்ப்பு உள்ளது. ‘‘ஆக்கஸ்’’ அமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்பது அமெரிக்காவுக்கு மட்டும் தான் தெரியும். அமெரிக்காவின் திடீர் பாசத்தை ஒன்றிய அரசு நம்ப வேண்டாம். ஆப்கன் தலிபான்கள் கையில் சென்றதால், தீவிரவாத அச்சுறுத்தல் இந்தியாவுக்கு அதிகம் இருக்கும் என்பதை தெரிந்தும், அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது கவனிக்க வேண்டிய ஒன்று.

ரஷ்யாவை நம்பி களத்தில் இறங்கலாம். ஆனால், அமெரிக்காவை நம்ப முடியாது. தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளையும் அமெரிக்கா பயன்படுத்தி கொள்ளும். கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆயுதம், நிதி உதவி ஆகியவற்றை அமெரிக்கா வழங்கியுள்ளதை மறந்து விட வேண்டாம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம், ஆயுதம் இறக்குமதி ஆகியவற்றில் ஒன்றிய அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவிடம் ராஜதந்திரங்களை ஒன்றிய அரசு கவனமாக கையாள வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்