SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று 23-வது பிறந்தநாள்! : சிறப்பு டூடுல் வெளியிட்டு தனக்கு தானே பெர்த் டே கொண்டாடும் கூகுள்!

2021-09-27@ 12:51:54

வாஷிங்டன் : பிரபல தேடுதளமான கூகுள், தனது 23-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் என்ற இரண்டு நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய ப்ராஜெக்ட்டாக ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள். நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான சர்ச் இன்ஜினாக வளர்த்து நிற்கிறது.

செப்டம்பர் 27, 1998 அன்று முதன்முதலாக கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள்.  

மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், 24 பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தான். கூகுள் நிறுவனத்தில் 53 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள். வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்