நாளை மறுதினம் காங்.கில் சேர்கிறார் கன்னையா குமார்
2021-09-26@ 03:08:19

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களால் கைது செய்யப்பட்டதால் புகழ் பெற்றார். தற்போது இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளார். அதேபோல், குஜராத்தை மாநிலத்தில் உள்ள வேதகம் தொகுதி எம்எல்ஏ.வாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. ராஷ்டிரிய தலித் அதிகார் மன்ச் கட்சியை சேர்ந்தவர். குஜராத்தில் தலித் தலைவராக உருவெடுத்து வருகிறார்.
இவர்கள் வரும் 28ம் தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இவர்கள் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி கட்சியில் இணைவார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த தேதி மாற்றப்பட்டு, முன்கூட்டியே காங்கிரசில் இணைகின்றனர். இவர்களுக்கு இக்கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும் செய்திகள்
காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் காயம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!
வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!
தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!