பவானிசாகர் அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டுமான பணி: விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
2021-09-23@ 12:11:22

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். தாளவாடி உபகோட்டத்திற்குட்பட்ட பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறை சந்தை முதல் தொட்டம்பாளையம் வழியாக எரங்காட்டூர் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளத்தின் குறுக்கே சாலையில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொட்டம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியாததால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு பவானிசாகர் செல்கிறது.
தொட்டம்பாளையம் கிராம மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பாலம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அன்றாடம் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கட்டுமான பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!