கடினமாக உழைக்கும் பொறியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் :பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!!
2021-09-15@ 12:02:04

டெல்லி : பொறியாளர்கள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளான இன்று அவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் மைசூரூக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்தநாளையே இந்திய பொறியாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.1860ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிதான் அவர் பிறந்தார். சிறந்த பொறியாளராக விளங்கிய இவர் பாரதரத்னா விருது பெற்றுள்ளார்.
இந்த நிலையில்,பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தார்.
மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “#EngineersDay பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நமது பூமியை சிறப்பானதாக்கி தொழிநுட்ப நவீனமயமாக்கலுக்கு முக்கிய பங்களிக்கும் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .இத்துறையில் முன்னோடியாக திகழ்ந்த திரு. எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினத்தில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விஸ்வேஸ்ரய்யாவின் சாதனைகளை இன்று நினைவு கூர்வோம், என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Tags:
பிரதமர் நரேந்திர மோடிமேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!